தென்கொரியாவில் அவசரநிலை அறிவித்த சில மணி நேரத்தில் ரத்து - சியோலில் இருந்து சகாய டர்சியூஸ்


தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் "அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்" என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர்.

சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்:

இரவு 10:23 மணி

ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார்.

இரவு 10:40 மணி

முக்கிய எதிர்க்கட்சி அவசர நாடாளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங், இராணுவ சட்டத்தை ரத்து செய்யும் செயல்முறையைத் தொடங்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற சபையில் கூடுமாறு வலியுறுத்தினார். நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆளும் கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூன், இராணுவ சட்டத்தை ரத்து செய்யும் அழைப்பில் இணைந்தார்.

இரவு 11:00 மணி

இராணுவ சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இரவு 11:14 மணி

சபாநாயகர் வூ வொன்-சிக் சபையில் வந்து சேர்ந்தார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை தடுப்புகளை கடந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டி, கோரம் தேவையை பூர்த்தி செய்தது. சபையின் முக்கிய அறை உள்பக்கமிருந்து தடுக்கப்பட்டது. ஒரு சிறப்பு படை பிரிவு வந்த  நிலையில் இராணுவ ஹெலிகாப்டர் வளாகத்தில் தரையிறங்கியது.

பின்னிரவு 12:27 மணி

ஆயுதம் ஏந்திய படையினர் நாடாளுமன்ற சபைக் கட்டடத்திற்குள் நுழைய முயன்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் மோதினர்.

பின்னிரவு 12:38 மணி

சில ஆயுதம் ஏந்திய படையினர் சபையின் முக்கிய கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

பின்னிரவு 12:48 மணி

முழு அமர்வு தொடங்கியது.

பின்னிரவு 1:01 மணி

இராணுவ சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னிரவு 1:04 மணி

தீர்மானம் 190-0 என்ற ஒருமனதாக முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் இராணுவ சட்டத்தை செல்லாததாக அறிவித்தார்.

பின்னிரவு 1:10 மணிக்குப் பிறகு

ஆயுதப்படையினர் சபைக் கட்டடத்தை விட்டு வெளியேறினர்.

அதிகாலை 4:26 மணி

ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவ சட்டத்தை திரும்பப் பெற தேசிய சபையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இராணுவ சட்டத்தை நீக்க அமைச்சரவையை கூட்டுவதாக உறுதியளித்தார், ஆனால் அரசை செயலிழக்கச் செய்த "பொறுப்பற்ற நடவடிக்கைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.


நன்றி: The Korea Hearld

Previous Post Next Post

نموذج الاتصال