திமுக மீதான வன்மங்களும், முதலமைச்சர் ஸ்டாலினின் அணுகுமுறைகளும்! - மு.ரா.விவேக்


 1. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் அந்த பள்ளி தாளாளர் அவர் மனைவி இன்னும் சில ஆசிரியர்கள் சிறையில் தான் இருந்தார்கள் பிறகு தான் பிணை கிடைத்தது -அந்த காலகட்டம் youtube சேனல் களில் எவ்வளோ பேர் எவ்வளவோ உண்மைகளை "உண்மை" என்று சொன்னார்கள் -எல்லோருக்கும் நினைவிருக்கும் "லவ் பைட்" என்ற வார்த்தை அப்படி சொன்னவர்களில் ஒருவர் கூட நீதிமன்றம் ஏறி அந்த ஆதாரங்களை சமர்பித்தார்களா என்றால் இல்லை!
நாம் எல்லோருக்கும் பொது புத்தியில் ஒன்றை ஏற்றிவிட்டார்கள் "அந்த பள்ளி தாளாளர் RSS " பண முதலை -அவரின் பசங்க எதோ பண்ணிட்டாங்க -பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அவர்களின் வீடு, -பர்த்டே பார்ட்டி என்று எவ்வளவோ பேச்சுகள் பேசிக்கொண்டே இருந்தார்கள் -ஆனால் இவை ஒன்றுக்கும் ஆதாரம் கொடுக்க தான் பேசியவர்கள் யாரும் இல்லாமல் போனார்கள் -கடைசியில் வந்த தகவல் அந்த பிள்ளை தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க என்று தான் உறுதியானது-இப்ப அந்த பிள்ளையின் வீடு பக்கம் கூட எட்டி பார்க்க ஆளில்லை -மறந்தாச்சு!
ஆனால் நாம் எல்லாம் எதிர்பார்த்தது போல் மூலையில் ஏற்றியதை வைத்து பார்த்தால் அந்த தாளாளர் செத்து இருந்தால் சந்தோசம் என்று இருந்திருப்போம் -இதுவும் ஒரு உள்ளக்கிடங்கு ஆதங்கம் -யார் மீது காட்டுவது என்ற ரீதியிலான விஷயம்!
2.ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரம்!
அதே போல் ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரம் -இறந்த அரை நாளில் பாதி தீர்ப்பே எழுதிவிட்டார்கள் , கோவத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் ,அவர்க்கு உயிரானவர்கள் பேசியது கூட கடுமையானது என்றாலும் ஒரு உணர்ச்சி பேருக்கு என்று எடுத்துக்கொள்ளலாம் -அதற்க்கு அடுத்து அரசு மருத்துவ மனையில் இருந்து வெளியே வர கூட போலீஸ் கெடுபுடி என்று ரஞ்சித்து திருமுருகன் இன்னும் சில பேர் -நேரடியாக திமுக திமுக என்று அர்ச்சிக்க தொடங்க -ஆரம்பிக்கிறது எதிர்வினை -திமுக தான் காரணம் என்று பேச ஆரம்பிக்கிறார்கள் ரஞ்சித் மற்றும் வெகு சில விசிக இணையவாசிகள் , முதலில் பதறினாலும் பிறகு திமுக இணைய வாசிகளும் எதிர்கேள்வி என்று சர்ச்சை போய்க்கொண்டே இருக்கிறது -சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று ஒருவர் கொளுத்தி போடா -பற்றி எரிகிறது இணைய ஊடகமும் முக்கிய ஊடகமும் -திமுகக்காரன் பிரார்த்தனை எல்லாம் கொலையை தாண்டி ஆட்சியை கேவலப்படுத்துறாங்களே -இதில் திமுக சம்பந்தப்பட்டு இருக்கக்கூடாது என்று தான் யோசிச்சோம், நம்பிக்கை வீண் போகலை !
அதே போல் ரஞ்சித் ஒரு மேடை அமைத்து அதற்க்கு விசிக தரப்பு செல்லாமல் இருக்க சில காரணங்கள், விசிக ரெண்டாம் கட்ட தலைவர்கள் வன்னியரசு,சிந்தனைச்செல்வன் ,ஷாநவாஸ் போன்றோர் தெளிவாய் பேசியும் -இதற்க்கு பின்னணியிலும் திமுக என்று தொட்டதுக்கெல்லாம் திமுகவை குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள் -முதல்வர் உறுதியாய் சில நடவடிக்கைகளை எடுத்தார் -காவல்துறை புதிய கமிஷ்னர் வந்தார் -ஒரு என்கவுண்டர் பல கைதுகள் பல கட்சி தலையீடு என்று அடுத்து அடுத்து வழக்கு போகிறது (அதிமுக பாஜக காங்கிரஸ் தாமாக விசிக) என்று பலர் கைதாக அவர்கள் வரிசையாக சம்பத்தப்பட்ட கட்சிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்கள் -அதிலும் ஒரு பிரமுகர் திமுக என்றே எல்லா ஊடகமும் சொன்னது -கடைசிவரை அதும் நிரூபணம் ஆகவில்லை திமுகவும் அதை மறுத்தது யாரையும் இதுசம்பந்தமாக நீக்கவும் இல்லை!
மொத்தத்தில் பல கட்சிகளை தாண்டி - அங்கு ஒரு விவகாரம் ரியல் எஸ்டேட் பணம் அதிகாரம் என்ற காரணம் முன்பகை என்று போய் ஒரு அரசியல் தலைவரின் முடிவு முடிந்தது -அது அரசியல் கொலை என்று சாதிய கொலை என்றும் முதலில் சொல்லி பேசினார்கள் -ஏறத்தாழ பல கட்சி பிரமுகர்கள் சேர்ந்து செய்து இருக்கிறார்கள் -அதே சாதிய கொலை என்றார்கள் ஆனால் பலர் உடந்தையாக அல்லது முதல் காரணிகளாக இருந்தவர்களும் ஒரே சமுதாயம் என்று நிரூபணம் ஆகி இறுதியில் முன்பகை தான் மோட்டிவ் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கலானது!
அந்த ஒரு மாதம் ஊடகம் வாயிலாகவும் இணையம் மூலமாகவும் செலுத்தப்பட்ட செய்திகள் எல்லாம் அது அரசியல் மற்றும் சாதிய கொலையாக இருந்திருந்தால் -பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பவர்கள் ஆழ்மனது நிம்மதிக்கு ஆளாகி இருக்கும் ,ஆனால் அது போல் நடக்காததால் அந்த கோவத்தை எங்கு மடைமாற்றி ஆசுவாச படுத்திக்கொள்ளமுடியும் -அதான் இருக்கே திமுக என்று நேற்றுகூட திமுகவை பிராண்டிக் கொண்டு இருக்கிறார்கள்!
3.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்!
அடுத்த பெரிய அவமானகரமான சம்பவம் என்றால் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், எடுத்த எடுப்பிலேயே குற்றாவளியை கைது செய்து சிறை படுத்தியது காவல்துறை 12 மணி நேரத்தில் -பிறகு எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆர்ப்பாட்டம் -நீதிமன்ற தலையீடு FIR லீக் என்று , கோல்கட்டா மாணவி கொலைக்கு பிறகு தொடர்ச்சியான அரசியல் வேலையை செய்ய முயற்சித்து தோற்றது பாஜகவும் அதிமுகவும் -சாட்டையடி செருப்படி என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் மொத்தத்தில் நீதிமன்றமே கண்டிக்கும் அளவு போனது -கைது விசாரணை நீதிமன்ற ஆலோசனையில் குழு என்று எல்லாம் அடுத்தடுத்து செய்தும் கேவலமாய் இன்னொரு பிரச்சாரம் யாரு அந்த சார்!? என்று திமுகவை பிராண்ட ஆரம்பித்தார்கள் -இன்னமும் நடந்துகொண்டு தான் இருக்கிறது -புகார் அளிக்கப்பட்ட மாணவி அடுத்த 24 மணிநேரத்துக்கும் பாதுகாப்பான அரசு கரங்களுக்குள் வந்து சேர்ந்தார் வழக்கு போகிறது -குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவரை விட அந்த கொடிய சம்பவத்தில் திமுகவை கோர்த்துவிடத்தான் இங்கு அரசியல் செய்தார்கள் என்பது தான் உண்மை!
4.வேங்கைவயல்
கடந்த சில நாளாய் வேங்கைவயல் விவகாரத்தால் ஒட்டுமொத்தமாய் திமுக மீதி விசிகவினர் கடுமையான விமர்சனம் வைத்து கொண்டு வருகிறார்கள் ,அதே அண்ணன் திருமா அவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பேசிவிட கட்டற்ற வார்தைகளை அள்ளி வீசுகிறார்கள் -இதுவரை இப்படியான கொடூர சம்பவம் நடந்தாய் நினைவில்லை -கொலை ,அடிதடி ,கொளுத்துதல் போன்றவை விட மோசமான சம்பவம் -கொடும் வாய்ப்பாய் சம்பந்தப்பட்டவர்கள் அதே சமுதாயம் என்று சொல்லியதால் -அதெப்படி? என்று பேசுகிறார்கள் ?
அதெப்படி என்றால் என்ன அர்த்தம் !?
அரசுக்கு இதுபோல் சென்சிடிவ் வழக்கில் பொய்யை பேசி தன் தலையில் மண்ணைவாரி போட்டுக்கொள்ள ஆசைப்படுவார்களா? -தொழில்நுட்பம் எங்கோ சென்று கொண்டு இருக்கும் இந்தக்காலத்தில் அப்படி பொய்யாய் அதும் பாதிக்கப்பட்டவர் மேலே குற்றம் சுமத்திவிட முடியுமா?
என்ன இப்படி எல்லாம் பேசுறாங்க என்று யோசிக்கவே கஷ்டமாய் இருக்கிறது -ஒரு படி மேலே
போய் பார்த்தால் பக்கத்துக்கு கிராமங்களில் இரு வேறு சமுதாயம் இருக்கு ,அதிலும் இருவர் பெயர் வருகிறது சமூகம் என்று பார்த்தால் -இருவரும் வெவ்வேறு சமுதாயம் ,கட்சி என்று பார்த்தால் அதிலும் திமுகவை காணும் -ஆடியோ வீடியோ DNA மாதிரிகள், தொலைபேசி அழைப்பு என்று பலவற்றை ஆராய்ந்து நடந்து முடிந்து தாக்களாகி இருக்கிறது குற்றப்பத்திரிக்கை !
மேற்படி சம்பவங்களை போல் இதிலும் திமுகவிற்கு எதிராய் ஒரு சமுதாயத்தை நிறுத்த தான் இங்கு அரசியல் நடக்கிறது -நீதிமன்றத்தில் சந்திப்போம் ,ஆதாரம் இருக்கு என்று கடந்த 48 மணிநேரமாய் பல யுகங்களை சொல்லிவருபவர்கள் இதுவரை நீதிமன்றம் சென்றதாக தகவலே இல்லை -மதுரை நீதிமன்றத்தில் கண்ணன் என்பவர் தொடுத்த வழக்கிற்கு -அரசு வழக்கறிஞர் திரு அசன் ஜின்னா , குற்றப்பத்திரிக்கை விஷயமாய் மீண்டும் ஒருமுறை எல்லா ஆதாரத்தையும் சமர்பித்தாகிவிட்டது என்று அரசின் பதிலை தெளிவாய் சொல்லிவிட்டார்!
ரெண்டு வருடமாய் நடந்த விசாரணை வேறுசமுதாயம் தான் செய்திருக்கும் என்றே பொதுப்புத்தி கருத்தை கருத்திற்கு வேறு விதமாய் ஆதாரம் வெளியானதும் எங்கே மனக்குமுறலை ஆதங்கத்தை இறக்கி வைப்பார்கள் -எப்பொழுது என்ன செய்வாரைகளோ அதே தான் திமுக மீது இறக்கி வைக்கிறார்கள்!
மேற்படி நான்கு விஷயங்களிலும் -அவர் இவர் என்று எந்த பாகுபாடும் காட்டாமல் அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து சட்டப்படி தண்டனையும் வாங்கிக்கொடுத்து இருக்கிறது குற்றம் சொல்பவர்கள் தான் இனி புதிய ஆதாரத்தை கொடுத்து நிரூபிக்க வேண்டும்!
ஆனால் இந்த வேங்கைவயல் விவகாரத்தில் இப்படி ஆகிப்போகும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம் யாரும் -அது தான் அதிர்ச்சியாக இருந்தது எல்லோருக்கும் -யாரையும் அப்படியெல்லாம் சிக்கவைத்துவிட முடியாதது என்பது நிதர்சனமான உண்மை!
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரம் ,அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் -இந்த வேங்கைவயல் விவகாரம் இதில் ஏதும் அரசு முன்னின்று நடத்திய விவகாரம் அல்லது எந்த கட்சி பொறுப்பேற்கவேண்டிய விவகாரமோ இல்லை-தனி நபர்கள் -தனி விருப்பு வெறுப்பு -குறுக்கு சிந்தனை போன்றவற்றால் ஏற்பட்ட அவமானகரமான விவகாரங்கள் என்று தான் தோன்றுகிறது -உள்ளபடியே திமுக அரசு தாமதமாக சில நடவடிக்கை இருந்தாலும் -தெளிவாய் விருப்பு வெறுப்பின்றி சட்டப்படி நிறுவி வருவதே அதற்கு சான்று!
என்ன நடந்தாலும் திமுக /திமுக பிரமுகர்கள் /திமுக அரசு என்று நிறுவுவது தான் இங்க முதல் அரசியல் -அப்படி ஒரு அரசியல் செய்து என்ன பண்ண போறீங்க -மேற்படி சம்பவங்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர் குற்றவாளிகள் தான் கொடூரமானவர்கள் தான் என்று சொலல் எந்த தயக்கமும் இல்லை!
இதான் தமிழ்நாடு -திமுக எதிர்ப்பு அரசியலின் நிலை!
ஆனாலும் உறுதியாய் சொல்லுவோம் தமிழ்நாடு பாதுகாப்பானவர் கையில் இருக்கிறது -எவருக்காகவும் எதற்கும் வளைந்து போகவேண்டிய அவசியம் இல்லை நம் முதல்வருக்கு!
Previous Post Next Post

نموذج الاتصال