மது போதைக்கும் கஞ்சா ஹெராயின் போதைக்கும் என்ன வித்தியாசம் - அருள்ராஜ் Arulraj

போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க…

உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?. 

உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில் செய்வோர்கள்னு  பெரும்பாலானவர்கள் எல்லாருமே தினமும் குடிக்கிறவங்கதான்.  

குடிக்கிறாங்கன்னா வாய்க்குள்ளாற விரல் விட்டுப்பார்த்து  தொண்டைக்குழி நிரம்புறவரை குடிச்சிட்டு மட்டையாகிறதுக்குப் பேரு குடி இல்லை. டெய்லி நைட் சாப்பாடு சாப்டுறமாதிரி லைட்டா குடிக்கிறதுக்குப் பேருதான் குடி. இவங்கள்லாம் ஒன்னோ ரெண்டோ பெக் அடிச்சிட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போயிறுவாங்க. 

தலைகால் மூழ்குற அளவுக்கு குடிச்சிட்டு குண்டித்துணி அவுந்தது கூட தெரியாமச் சுத்துற கேஸ்கள்லாம் ரொம்பச் சொற்பமான எண்ணிக்கைதான். 

இன்னும் விவரமா சொல்லப்போனா எவ்வளவுதான் வயிறுமுட்டக் குடிச்சாலும் ரெண்டுதடவை ஒன்னுக்குப் போனா மூணு மணி நேரத்துல மொத்த போதையும் தெளிஞ்சிரும். 

டெய்லி குடிக்கிற மொடாக்குடியன்கூட மறுநாள் காலைல வழக்கம்போல எந்திருச்சு வேலைக்குப் போயிறுவான். எவ்வளவு தான் பெரிய குடிகாரனா இருந்தாலும் வாழ்க்கைல ஏதாவது ஒரு கட்டத்துல வேணாம்னு நெனச்சா உடனே குடியை விட முடியும்.

ஐயப்பன் கோயிலுக்கும் பழனி முருகன் கோயிலுக்கும் மாலை போடுறவங்களும், ரம்ஜான் நோன்பு இருக்கவங்களும் ரொம்ப சாதாரணமா அந்தக் குறிப்பிட்ட காலங்கல்ல மட்டும் குடிக்காம இருக்கதைப் பார்க்க முடியும். பெருசா பின் விளைவுகள் எதுவும் இருக்காது.

ஆனா பல்வேறு பெயர்களில் இருக்கும் போதை வஸ்துக்கள் அப்படி அல்ல. இந்தச் சனியன்களைப் பயன்படுத்த தொடங்கிட்டா அதை விட்டுட்டு வெளியே வரவே முடியாது. 

காலேஜ் பசங்களா இருந்தா அதுக்கப்புறம் படிப்புங்கிறது அவனுக மண்டைல ஏறவே ஏறாது. ஒருதடவை அடிச்சா ரெண்டுநாள் மூணுநாள்வரை தாக்குப் பிடிக்கிற ஐட்டங்களும் மார்க்கெட்ல இருக்கு. ஒழுங்கா சாப்ட முடியாது. நேரங்காலம் தெரியாம தூங்குவானுங்க. 

போதைல இருக்க நேரத்துல யாரும் எதுவும் சொல்லவே முடியாது. அதைக்கேட்கிற மனநிலைகூட அவங்களுக்கு இருக்காது. எதுசொன்னாலும் சரினு சொல்லுவாங்க இல்லைனா சொல்ரதை எல்லாம் எதிர்த்துப் பேசுவாங்க. 

படிக்கனும்னோ வேலைவெட்டிக்குப் போகனும்னோ அவங்களுக்குத் தோனவே தோனாது. கொஞ்சநாள் பழகிட்டா அடுத்து அது இல்லாம இருக்கவே முடியாது. அது கிடைக்கிறதுக்காக என்னவேணாலும் செஞ்சு தொலைப்பானுக. 

பணம் போகுதே மானம் போகுதே மரியாதை போகுதே மொத்த வாழ்க்கையும் போகுதேங்கிற சிந்தனையே வராது.  ஒரு சின்ன உலகத்துக்குள்ளாற அவங்களே அவங்களை அடைச்சிக்குவாங்க. 

ஆரம்ப கட்டத்துல முயற்சி பன்னுனா ஓரளவு குணப்படுத்தலாம். ஆறுமாசம் விட்டுட்டா தண்ணி தெளிச்சு விட்ற வேண்டியதுதான்.

 தண்ணியப் போட்டவனுக கொழுப்பெடுத்துப்போயி அடுத்தவங்களை ஹோத்தா ஹொம்மானு திட்றமாதிரித்தான் இந்தப் போதை வஸ்துக்களை ஏத்துனவனுக கொலை கொள்ளை கற்பழிப்பை எல்லாம் பின் விளைவுகள் தெரியாம ரொம்பச் சாதாரணமாச் செய்றானுக. 

இதைலாம் விட ரொம்ப முக்கியமான விசயம்… சின்ன வயசுலயே இதை அடிக்கத் தொடங்கிட்டா அதிகபட்சம் நாற்பது வயசுலயே கிட்னி சட்னி ஆயிரும்.  அதுக்கு மேல என்னத்தை நொட்ட முடியும்னு இப்போ புரியாது. 

போதை வஸ்துக்களைப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில்  என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்  என்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்துமே  நல்ல உதாரணங்கள். (யாரும் என்னய கடிக்க வராதீங்க. அவங்க பழைய ஹிஸ்ட்ரியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க) 

விஜயகாந்த் அண்மைக்காலம் வரை உயிரோடு இருந்ததற்கும் ரஜினிகாந்த் இன்னமும் உயிரோடு இருப்பதற்கும் அவர்களிடம் இருக்கும் பணபலமும் வாழ்வியல் சூழ்நிலைகளுமே காரணம். அந்த ரெண்டுபேருக்கும் அமைஞ்சமாதிரி எல்லாருக்கும் பணபலமும் வாழ்க்கைத் தரமும் அமையுமா? 

போதை மாத்திரைகள், போதைப் பவுடர்கள் மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், கடத்துபவர்கள், விநியோகம் செய்பவர்கள், உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் போன்ற அனைவரையும் கடுகளவுகூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் கழுவிலேற்ற வேண்டும். 

அதற்குத் தேவையான சட்டங்களை உடனே இயற்றவேண்டும். அல்லாமல் எந்தவொரு மாநில அல்லது  ஒன்றிய அரசாங்கங்களையோ, ஏதோ ஒருசில அரசியல் கட்சிகளையோ மட்டும் குறைசொல்லி பிரச்சனையைத் திசைதிருப்புவதெல்லாம் இந்தத் தேசத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

அண்மைக்காலமாக காலமாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொடூரமான கொலைகளுக்குப்பின்னால் வீரியம் கூடிய போதைப்பொருட்களின் பயன்பாடுகள் இருப்பதை நம் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

உபி’யில் ஒரு கயவன் ஒரு பெண்ணிற்கு காவல்துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி ஒன்பது லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவளுடன் உடலுறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ‘கற்பழித்தவனே அவளை மூன்று மாதத்திற்குள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற ஆலமரத்தடித் தீர்ப்பை உதிர்த்துள்ளது. 

ஒருவன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் உடலுறவு வைத்துகொண்டதால் ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றும் தனக்கு நீதிவேண்டும் என்றும் 13 வருடங்களுக்கு முன்னால்  வழக்குத் தொடுத்த ஒரு பெண்ணிற்கு ‘நீதிமன்றத்திற்கு வெளியே இரண்டு மாதங்களுக்குள் செட்டில்மென்ட் செய்து கொள்ளுங்கள்’ என்ற கேடுகெட்டதொரு தீர்ப்பை இந்தியாவின் உச்சநீதிமன்றமே உதிர்த்த கேவலமும் அண்மையில் நடந்தேறியது. 

பெரும் மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகளில் எல்லாமே குற்றங்கள் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குற்றவாளிகள்மீது சரியான நடவடிக்கைகளை எடுத்து கடுமையான தண்டனைகளை கொடுக்க முடியும். 

ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத பழமையான சட்டங்களை வைத்துள்ள நம்நாட்டில் குற்றவாளிகள் மீது என்னமாதிரியான நடவடிக்கைகளை எடுத்துவிட முடிகிறது? அதற்கான சட்டப்பிரிவுகளை காலமாற்றத்திற்கேற்ற வகையில் மாற்றி வைத்திருக்கிறோமா? 

பணபலமும், அரசியல் செல்வாக்கும், ஜாதியப் பின்புலமும் உள்ள எவரையுமே நம் சட்டங்களால் கட்டுப்படுத்தவோ தண்டிக்கவோ முடிவதில்லை. 

உண்மையிலேயே நம் இந்தியா ஒளிர வேண்டுமானால்… 

பார்ப்பனீயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றச் சீர்திருத்தங்களில் தொடங்கி, அரசின் பல்வேறு துறைகளையும் கட்டுப்படுத்தும் ஆதிக்கஜாதி செயலாளர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இதெல்லாம் கனவில்கூட இந்தியாவில் சாத்தியமில்லாத விடயங்கள். 

‘அரசாங்கமே அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்’ என்ற கீழ்த்தரமான சிந்தனையை விடுத்து நாம் எல்லோரும் சமூக ஒழுங்கை கடைப்பிடித்து முடிந்தவரை நேர்மையாக வாழப்பழக வேண்டும். 

மேலும்… உள்ளூர் காவல்துறையில் ஒத்துழைப்போடு அவரவர் பாதுகாப்பை அவரவரே உறுதி செய்து கொள்வதைதவிற நமக்கெல்லாம் வேறு வழியில்லை. 

கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்.

#Arulraj

Previous Post Next Post

نموذج الاتصال