பினராயி விஜயனுடன் பிரகாஷ் காரத்
கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் போதும் என்கிற முடிவுக்கு பிரகாஷ் காரத் வந்துவிட்டார் போல.அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. அனேகமாக பாஜக
எதிர்ப்பை அவர் கைவிட்டுவிட்டார். கேரள கம்யூனிஸ்ட்டுகளையும் அந்த முடிவை ஏற்கும் நிலைக்கு
கொண்டுவந்து விட்டார் என்றே தெரிகிறது.
மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரகாஷ் காரத்தின் பங்காளிகள் அனைவரும் பாஜகவுக்கு மாறிவிட்டார்கள்
என்பது நிதர்சனமான உண்மையாகி விட்டது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவருடைய
பங்காளிகளே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, கட்சி நடத்தலாம்
என்று பிரகாஷ் காரத் நினைப்பதாக கூறப்படுகிறது.
பினராயி விஜயனுக்கு பிறகு முதலமைச்சர் பதவியையும் அவர் குறிவைத்திருப்பதாக
தெரிகிறது.
அனேகமாக மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில், பாஜக
என்பது பாசிச கட்சி அல்ல என்று ஆய்வு முடிவுகளும், கடந்த தேர்தலோடு இந்தியா கூட்டணி
முடிவுக்கு வந்துவிட்டது என்ற அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக மூத்த முன்னோடிகள்
கணிக்கிறார்கள்.
பிரகாஷ் காரத்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் பிரதமர் மோடி
உற்சாகம் அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
நிர்மலா சீத்தாராமனுடன் பினராயி விஜயன் சந்திப்பு
அதன் விளைவாகத்தான், சமீபத்தில் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலாவை, கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்துடனும், டெல்லிக்கான கேரளா பிரதிநிதி கே.வி.தாமஸ் ஆகியோருடன் முதலமைச்சர் பினராயி சந்தித்தார்.இந்தச் சந்திப்புக்கு பிறகுதான் கேரளாவுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் நிதியை ஊறுகாய் மாமி ஒதுக்கி இருக்கிறார் என்றும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு தீர்வும் கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.
அதாவது, தென் மாநிலங்களில் பாஜக தலையெடுக்க பிரகாஷ் காரத்
அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார் என்கிறார்கள்.
திமுகவை தன்பக்கம் இழுக்க பாஜக எத்தனையோ தந்திரங்களை கையாண்டாலும்,
பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ள நிலையில் பிரகாஷ் காரத் கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை
பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார் என்றே சொல்கிறார்கள்.
சீதாராம் யெச்சூரி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும்,
கட்சியில் தனக்குள்ள பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்டு அவரை செயல்பட விடாமல் முட்டுக்கட்டை
போட்டவர் பிரகாஷ் காரத்.
இப்போதும் யெச்சூரி மரணத்துக்கு பிறகு தற்காலிக செயலாளரை
தேர்ந்தெடுக்க விடாமல், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரை நியமிக்கும்படி செய்ததும்
அவருடைய தந்திரம்தான். அந்த அளவுக்கு உயர்நிலைக் குழுக்களில் அவருடைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்
என்று ஆதங்கப்படுகிறார்கள்.
அடுத்த பொதுச்செயலாளரும் இவருடைய கைப்பாவையாக இருக்கலாம்
என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.