எம்ஜியார் - ஜெயலிதா குறித்த பொய்ப் பிம்பங்களும் உண்மைகளும் - உளவாளி

அதிமுகவினரும் திமுக எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து பரப்பும் பச்சைப் பொய்கள் !

அவை என்னென்ன ?

1.) கலைஞரால் எம் ஜி ஆரை கடைசிவரை வீழ்த்தவே இயலவில்லை !

இது ஏன் பச்சைப் பொய் என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் என்றாலே தொடை நடுங்குபவர் எம் ஜி ஆர்.  மாநகராட்சிகளில் திமுகவின் பலம் என்னவென்று அவர் அறிவார்.  உள்ளாட்சி தேர்தல் முறையைக் கெடுத்தவரே அவர்தான்.  அதை மீண்டும் முறையாகச் செயல்பட வைத்தவர் கலைஞர்(1996)

அதேபோல பட்டதாரிகள் மட்டுமே வாக்களித்து மேலவைக்குச் செல்லும் எம் எல் சி முறையையும் கண்டு எம் ஜி ஆர் நடுங்கினார்.  படித்தவர்களுடைய வாக்குகள் என்றால் தமக்கு போணியாகாது என்று நன்குணர்ந்தவர் அந்த வீரர்.   வெண்ணிற ஆடை நிர்மலா மூலம் மேலவைக்கும் முடிவு கட்டினார் பொன்மனச் செம்மல்.  

1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளை திமுக + காங்கிரஸ் வெல்ல, வெறுமனே 2 தொகுதிகளை மட்டுமே எம் ஜி ஆர் பெற்றார்.  சில சங்கிச் செயல்களால் இவ்வளவு பெரிய தோல்வி அவருக்கு வாய்த்தது.

ஆங் நாங்க சட்டமன்றத் தேர்தலல்ல சொல்றோம்ன்னுட்டு ர ர நைஸா நழுவுவான்.

ஆனால் எந்தத் தேர்தல்களிலும் எம் ஜி ஆர் தோற்றதேயில்லை என்றுதான் இதற்கு முன் மார் தட்டியிருப்பான்.

2.) கலைஞர்தான் சங்கிகளை முதன்முதலாக தமிழ் மண்ணில் காலூன்ற வைத்தவர் !

இது கொடூரமான பச்சைப்பொய்.  1998 ல், சங்கிகளுடன் முதன்முதலாக கூட்டணி அமைத்து போட்டியிட்டவர் ஜெயலலிதா.  அந்தத் தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்த அத்வானியைக் கொல்வதற்காக பைப் பாம் என்று ஒரு கதை புனையப்பட்டது.  1991 - 1996 ல் காவல்துறையை முற்றிலுமாகக் குலைத்து விட்டிருந்தார் ஜெயலலிதா.  அதன் பின்விளைவை முழுமையாக அனுபவித்தார் கலைஞர்.  அதனால் கோட்டைமேட்டில் காவலர் - இஸ்லாமியர் மோதல் பெரிதாகி, பின் அது கலவரமாகி, அந்தக் கலவரம்தான் கோவை தொடர் குண்டுவெடிப்பில் போய் முடிந்தது.  

14/02/1998 ல் இவை நடக்க, 16 ம் தேதி தேர்தல்.  மூன்று கட்டங்களாக அந்த பிப்ரவரியிலேயே முடிந்தும் விட்டது.  

40 ல் 30 தொகுதிகளை ஜெயலலிதா வென்றார்.  அதில் மூன்று பீஜேபீயினர்.  இன்றைய மராட்டிய ஆளுநராக இருக்கும் சி.பி ராதாகிருஷ்ணன்(கோவை) மாஸ்டர் மாதன்(நீலகிரி.  நீலகிரி அப்போது பொதுத்தொகுதி) ரங்கராஜன் குமாரமங்கலம்(திருச்சி)

இவர்களில் ரங்கராஜன் ஒன்றியத்தில் அமைச்சராகவும் இருந்தவர்.

3.) சங்கிகளின் அமைச்சரவையில் முதன்முதலாக பங்கு பெற்றது திமுகதான் !

இதுவும் அப்பட்டமானப் பொய்.    குஜராத் கலவரத்திற்கு பயிற்சி பட்டரையாக இருந்த நகரம் எது தெரியுமா ? கோவை.  ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாங்கள் கோவையில் பயிற்சி எடுத்துக் கொண்டதாய்(ரோஜா உட்பட பல படங்கள்) சினிமாக்களில் காட்டுவார்கள்.  உண்மையில் அங்கு சங்கித் தீவிரவாதிகள்தான் பயிற்சி பெற்றனர்.  குண்டுவெடிப்புக்கு முன் நடந்த கலவரத்தின் போது குறிபார்த்து இஸ்லாமியரின் சொத்துக்களைச் சூறையாடினர், தீக்கிரையாக்கினர்.  போலிஸ் வேடிக்கை பார்த்தது. (இதை அப்படியே குஜராத் கலவரத்திற்கு நான்காண்டுகள் கழித்து பயன்படுத்தினர்) 

அதன் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.   

இப்படியான அட்டூழியங்களினால் மூளைச் சலவைக்குள்ளான மக்கள் சங்கிகளின் கூட்டணிக்கு வாக்களித்தனர்.  யோவ், கரசேவைக்கு என் பங்காக செங்கற்களை அனுப்புவேன்னு அந்தம்மா 1992 லியே சொல்லிவிட்டார்.  கும்பகோணம் மகாமகத்தில் ஜலக்கிரீடை செய்து பல நூற்றுக்கணக்கான பக்தர்களை கொன்றவர்.  அந்தம்மாதான்ய்யா ஈசியா சங்கிகளோடு சிங் ஆக முடியும் ?

அதிமுக தன் வாழ்க்கையில் முதன்முறையாக ஒன்றிய அரசில் பங்குவகிக்க ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.  ஜெயா டெல்லிக்குப் போனார்.  அது கூட்டணி ஆட்சி.  அதாவது வாஜ்பாய் கட்சி இன்று போலவே அன்றும் மைனாரிட்டி.  அனைத்துக் கூட்டணி கட்சி எம்பிக்களுடைய ஆதரவுக் கடிதம் கொடுத்தால்தான் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.  டெல்லிக்குச் சென்று பிரபல ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் தங்கியிருந்த அந்தம்மா எல்லாத் தொலைபேசி ரிசீவர்களையும் எடுத்து கீழே வைத்துவிட்டார்.  ஓர் எம் எல் ஏவாக கூட அன்று அந்தம்மா இல்லை.  இருந்தும் ஆட்டம் ஓவர்.  

எனக்கு என்னென்ன துறைகளை ஒதுக்குவீர்கள் என்று போன் கிட்டாமல் நேரில் வந்தவர்களிடம் கேட்டார் ஜெயலலிதா.

நமக்கு, எங்களுக்கு, நாங்கள், நாம் என்றெல்லாம் ஜெயாவுக்கு பேசத் தெரியாது.  எனக்கு, நான் என்றுதான் கேட்பார்.  சட்டத்துறை எனக்கு கண்டிப்பாய் வேண்டும் என்கிறார்.  ஒத்துக்கிட்டா ஆதரவுக்கடிதம் கொடுப்பேன், இல்லைன்னா உதிர்ந்த மயிரேப் போச்சுன்னு சென்னை கிளம்பிருவேன்.

ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல தோழர்களே, கூட்டணி வைத்து வென்று, மூன்று நாட்களுக்கும் மேல் காயவிட்டார்.  கடைசியில் சங்கிகள் படிந்தனர்.

ஏன் சட்டத்துறையை வற்புறுத்திக் கேட்டார் ?

ஊழல்திலகமான அந்தம்மா மீது 1996 -ல், தொடரப்பட்டிருந்த அத்தனை வழக்குகளையும் சட்ட அமைச்சர் மூலமாக நீர்க்கச் செய்துவிடலாம் எனக் கணித்தார்.  அசோக்குமார், சிவப்பா போன்ற நீதிபதிகளின் வயதை தவறாகக் கொடுத்துவிட்டனர், சாதியில் குளறுபடி என்றெல்லாம் அழுத்தம் கொடுத்து அவர்களைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்தார்.  அவர்களெல்லாம் இதற்கு முன் ஜெயாவைத் தீர்ப்புகளால் வறுத்தெடுத்தவர்கள்.

ஆனால், ஒன்றிய அரசில் பங்கு வகித்துமே இன்று போலெல்லாம் அன்று எளிதாக நீதியை வளைக்கவியலவில்லை.  ச்சீ ச்சீ இந்தப் பழம் ஒரே கசப்பு என்று ஒரே வருடத்தில் நாடுமுழுக்க மீண்டும் தேர்தல் வர ஜெயாவே காராணமானார்.  ஏன் ?

அய்ய, இன்னாமா நீ, நாந்தானே உன் மேல கேசு போட்டேன், நான் நினச்சா எல்லாம் வாபஸ் ஆகிடும், வா சோனியாவ மீட் பண்ணு, டீ சாப்பிடலாம் என சு சாமி அழைக்க ;

அப்பாயின்மென்ட் வேணும்ன்னா முதல்ல கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினு வா என்று சோனியா கதவை திறக்க மறுக்க ;

ஆதரவை விலக்கிக் கொண்டார் ஜெயா.

நடுக்கடலில் கப்பல் நின்னுப் போனா, அதுவா சரியானா பிரச்சினை இல்ல.  இல்லைன்னா இறங்கி நீ தள்ளி விடணும்ன்னு செந்தில் சொல்வார்ல்ல ?  அதுமாதிரி ஆகிப் போச்சு ஜெயலலிதா கதை.

இதோடா, இதுதான் எங்களுக்குத் தெரியுமே!  நாங்க சொன்னது தமிழ்நாட்டு சட்டசபைல பீஜேபீ கால் வைக்க கலைஞர்தானே காரணம்?

இல்லை.  1996 லியே பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து வேலாயுதம் என்பவர் பீஜேபீ சார்பாக தமிழகச் சட்டசபையில் தனித்து நின்று கால்பதித்து விட்டார்.   இதற்கடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் ஹெச்.ராஜா போன்றோர் எம் எல் ஏ ஆக முடிந்தது !

4.) ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக வந்திருக்கவே முடியாது !

2016 -ல் மிகப்பலமான எண்ணிக்கையில் திமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தபோதே ஜெயலலிதா பாதி நொறுங்கிப் போனார்.

உண்மையில் அந்த வெற்றி மோடியால் விளைந்தது.  அதற்கான பேரங்கள் 2014 ன் போதே நடந்து முடிந்திருந்தன.  மூன்று கண்டெய்னர்கள் பணம், நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை, ஜெயலலிதாவின் மர்ம 75 நாட்கள் என யாவும் அதையொட்டி நிகழ்ந்தவைகளே !

2016 அல்லது ஸ்டாலின் எண்ணியிருந்தால் 2017 -ல் இங்கு முதலமைச்சர் ஆகியிருந்திருக்கலாம்.  அப்படியான பீஜேபீ குணம் ஸ்டாலினுக்கு என்றுமே இருந்ததில்லை.

5.) ஜெயலலிதா உங்களுக்கு தண்ணி காட்டினார் !

இது மட்டும் உண்மை.  எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தச் சென்னைக்கே காட்டினார்.   பெரிய பெரிய விவிஐபிக்களின் சாவுகள் கூட அனாதைப் பிணம் போல சுடுகாடு போனது, இந்தத் தண்ணியைக் காட்டியதால் நிகழ்ந்தன.

ஒன்று தெரியுமா ?  முதலமைச்சராக இருந்த போதே தேர்தலில் தோற்றவர் ஜெயலலிதா.  முதலமைச்சராக இருந்தபோதே பதவியை இழந்து ஜெயிலுக்குப் போனவர் ஜெயலலிதா.  முதலமைச்சராக இருந்தபோதே அனாதையைப் போல யாரும் பார்க்கவியலாமல் காணாப்பிணமாகக் கிடந்தார் ஜெயலலிதா !

2016 ல் ஆளுங்கட்சி என்று பெயர், ஆனால் இரண்டு தொகுதிகளில் டெப்பாசிட்டைப் பறிகொடுத்திருந்தார் ஜெயலலிதா !

எந்த AI யிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், ஊழல்திலகம் ஜெயலலிதா என்றுதான் அவைகள் சொல்லும்.  ஒரே காரணம் திமுக.

உலகில் அப்படி எந்தக் கட்சியுமே எதிரியை இவ்வளவுத் துல்லியமாக வீழ்த்தியதே இல்லை.  

ஜெயா தன் இறுதிகாலத்தில் வாழும் போதும், செத்த பின்னும் கூட நீ குற்றவாளி.  உன் குற்றங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன.  உணவு இடைவேளைக்குப் பின் தீர்ப்பை அறிவிக்கிறேன்.  அதற்குள் இவருடைய காரிலிருந்து தேசியக் கொடி, தேசியச் சின்னங்கள் அனைத்தையும் அகற்றுங்கள் என்று குன்ஹா சொன்னது, ஒலித்துக் கொண்டே இருந்தது!

ஆமாம், ஜெயாதான் திமுகவுக்கு தண்ணி காட்டினார்.

ர ரக்களே சங்கி சகவாசம்தான் இப்படி உங்களைப் பொய் பேச வைக்கிறது.  நீங்களும் சங்கிகளும் நகமும், அழுக்குமானவர்கள்.  உங்களிருவரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது.  எனவே இன்னும் பொய் பேசுங்கள்.  ஆனால் நாங்கள் அதைத் தரவுகளால் அழித்துக் கொண்டே இருப்போம்!

Previous Post Next Post

نموذج الاتصال