Sale!

DRAVIDA MARABU KATTIDA KALAI ILAKKANAM – திராவிட மரபுக் கட்டிடக் கலை இலக்கணம்

Original price was: ₹400.00.Current price is: ₹350.00.

மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் துவக்ககாலத்தில் ஆசிரியர்கள் கிரந்தலிபியிலிருந்த மூல நூல்களை மொழி பெயர்த்து அதனைக் கொண்டு மாணாக்கர்களுக்கு குறிப்புகளை வகுப்பில் கொடுப்பதே வழக்கிலிருந்து வந்தது. அவ்வாறு அக்கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றிய அமரர். திரு.குமரேச ஸ்தபதி அவர்களால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை கல்லூரியின் முன்னாள் மாணாக்கர் திரு. ஜெயராமன் (சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்) அவர்கள் தமது கையேடு ஒன்றில் தொகுத்து பாதுகாத்து வந்துள்ளார். அவரிடமிருந்து பெற்று தற்போது பயிலும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் அச்சேற்றி வழங்கலாம் என்று ஆவலால் ஒரு சில முயற்சியெடுத்து கிடைக்கப் பெற்ற கையேட்டையும் மூலநூல்களையும் ஒப்புமைபடுத்தி பார்த்ததில் கையேட்டிலிருந்த குறைகளை சரிசெய்து மூலநூல்களின்படி அதிஸ்டானம், உபபீடம் போன்றவைகளை முறைப்படுத்தியுள்ளோம்.
மேலும் கையேட்டில் இல்லாத பகுதிகளையும் இணைத்து முழு நூலாக அமைக்கும் நோக்கில்,
மானசாரம், காஸ்யபம் போன்ற நூல்களிலிருந்து பரிவார ஆலயங்களுக்கான அமைப்பிலக்கணமும்,
மானசாரம், மயமத்தில் கூறப்பட்டுள்ள அதிஸ்டான வகைகளையும் மயமதத்தில் இருந்து கோபுர இலக்கணம், ஸ்தூபி இலக்கணம், கர்பந்யாஷம் போன்றவைகளையும்,
மானசாரத்திலிருந்து பிரஸ்தர இலக்கணத்தையும் தொகுத்துள்ளோம்.
கலை பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் எனும் நம்பிக்கையோடு இந்நூல் எங்களால் வெளியிடப்படுகிறது.
மேலும் இந்நூல் சிறப்பாக அமைய காரணமான கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஐயா திரு. குமரேச ஸ்தபதி அவர்களுக்கும் குறிப்புகளை தொகுத்து கையேட்டை பாதுகாத்து நமக்கு அளித்த முன்னாள் மாணவர் சங்கராபுரம் திரு. ஜெயராமன் அவர்களுக்கும் நன்றி.

Description

தமிழகத்தின் தனித்த அடையாளமாக விளங்கும் கோவில் கட்டடக்கலை அழகியலுடன் நேர்த்தியான அறிவியல் சார்ந்த தனித்துவமான கட்டுமான நுட்பத்தைக் கொண்டதாகும். வரலாற்று ஆசிரியர்களாலும் ஆய்வாளர்களாலும் திராவிடபாணி கட்டடக்கலை என்றழைக்கப்படும் இக்கலைப்பாணி பொதுவாக தென்னிந்தியாவிற்கு உரியதெனினும் வடஇந்திய பகுதிகளான அஜந்தா, எல்லோராவின் குடைவரைகளிலும் இக்கலை நுட்பத்தைக் காணலாம்.
இசையின் தாளலயம் எவ்வாறு நம் மனதை ஒருநிலைப்படுத்தி லயிக்க வைக்கிறதோ அதுபோன்றே இக்கட்டக்கலையின் ஏற்ற, இறக்க, அடக்க, களத்திகளுடன் கூடிய மரத்தச்சு தொழில் நுட்பத்தோடு கூடிய புறத்தோற்றம் நமக்கு அழகியல் சுவையோடு மனஎழுச்சியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே இந்திய மதங்கள் யாவும் இக்கட்டடக் கலையைக் கொண்டு தங்களின் வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொண்டன.
துவக்கத்தில் துறவிகள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பௌத்த, சமண குடைவரைகள் பின்னர் தத்தமது இறை உருவங்களை வழிபடும் வழிபாட்டுத் தளங்களாக மாறின. பின்னர் உருவ வழிபாட்டிற்குள் வந்த வைதீக சமயங்களான சைவமும், வைணவமும் இக்கட்டடக் கலையை தங்களது வழி பாட்டுத்தளங்களுக்கு பயன்படுத்திக் கொண்டன.
பழந்தமிழரின் வழிபாட்டுத் தளங்கள் கோட்டம் என்றே அழைக்கப்பட்டன. இன்றும் முருகன் கோவில்கள் குமரக்கோட்டம், கந்தக்கோட்டம் என்றே அழைக்கப்படுவது நோக்கத்தக்கது. தற்போது கண்டெடுக்கபட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த ‘ஏகன் ஆதன்’ கோட்டம் என்ற தமிழ்க்கல்வெட்டு மேற்கானும் கருத்துக்கு வலிமையாக சான்றுரைக்கிறது. சிலப்பதிகாரத்தில் அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம், பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் பறம்பணையான் வாழ்கோட்டம், நிக்கந்த கோட்டம், நிலாக்கேட்டம் என பல்வேறு கோட்டங்கள் பற்றிய பதிவுகள் உள்ளன.
கோயில் எனும் சொல் கோ-தலைவன் அல்லது அரசன், இல்-இல்லம் அரசனின் இல்லம் என்று பொருள்படுகிறது. கோயிலானது அரசு அலுவலகமாகவும், நாட்டின் கருவூலமாகவும், அரசவை, அமைச்சரவையாகவும், நாட்டிய அரங்கமாகவும், விளங்கியது. பழந்தமிழரின் வாழ்வியலில் எலலாவகைக் கட்டிடங்களும், பொருட்களும் அழகியல் கூறுகளுடனே படைக்கப்பட்டன. அரண்மனையில் காட்சிக்காக வைக்கப்படும் விலங்குகளின் கூண்டுகள் கூட கோயில்களின் அங்கங்களான பாதம், பிரஸ்தரம், கண்டம், சிகரம் போன்ற அமைப்புகளுடன் கூடியதாக இருந்தன என்ற மானசாரம் எனும் சிற்ப நூல் சான்று பகர்கின்றது.சங்க இலக்கியங்கள் கூறும் எழுநிலை மாடம், எழில் நிலை மாடம், அணிநிலைமாடம் போன்றவை அரசன் மற்றும் மக்களின் வாழ்விடங்களே.
இத்தகு போற்றுதலுக்குரிய இக்கலையின் இலக்கணங்கள் யாவும் கிரந்தலிபி அல்லது நாகரலிபி போன்ற சமஸ்கிருத மொழியிலேயே கிடைத்துள்ளன. கோயிற் கட்டிடத்தின் அடிப்படை அளவான கருவரையின் அகலம் ‘கால்புறவாய்’ அகலம் என்றே இன்றும் இத்துறை சார்ந்தோர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு. வை.கணபதி ஸ்தபதி அவர்கள் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்காணும் தமிழ்ச் சொற்கள் இன்னும் வழக்கிலிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
அலுங்கு, அடங்கல், ஆளாங்கு, அலர்படி, அவையம், அணிவொட்டிக்கால், உள்நாட்டியம், உட்கூடு, குமுதகம், பாவுக்கல், கோணவிட்டம், நிலைக்கால், பிள்ளைக்கால், பலமுனை, பத்திரிப்பு, மதலை, நானுதல், நேரிசை, மகரஇசை, மாற்றானிசை, இடைக்கட்டு மேழிஉத்திரம், மேழிப்போதிகை, கொடுங்கை, சுரிப்பு, குறிபானம் முழக்கோல், கட்டாயம், புறநாட்டு, அகநாட்டு, மானாங்கனி, நிலங்கானி எனும் சொற்களைத் தெரியாதவன் கட்டடக் கலைஞனாக பரிணமிக்க முடியாது என திரு. வை. கணபதி ஸ்தபதியார் வலியுறுத்துகிறார். கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கான இலக்கண நூல்கள் தமிழில் இயற்றப்பட்டு மொழிமாற்றம் செய்திருக்கலாம் அல்லது சிற்பிகள் கட்டடக் கலைஞர்களிடம் வாய்மொழியாகப் பெற்று மொழிமாற்றிருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் ஆடலரங்கு அமைப்பதற்கு விரல் அளவை அடிப்படையாகக் கொண்ட முழக்கோல் பயன்பாட்டிலிருந்தது.
‘எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசான் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபில் அரங்க மளக்கும்
கோலன விருபத்து நால் விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஓருகோல் உயரத்துறுப்பினதாகி
உத்தரப்பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்றவாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கு
சிலம்பு 1:3:95 – 106
என ஆடலரங்குக்கான முழக்கோல் அளவை முறையை கூறுவது சிலம்பு. இவ்வாறான தமிழ் அளவுகோல்கள் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களில் காணப்படுவதால். கட்டிடக்கலைக்கான தமிழ் இலக்கண நூல்கள் இருந்து பின்பு கிடைக்கப்பெறாமலோ அல்லது அழிந்துபட்டோ இருக்கலாம் தற்போது கட்டக்கலை மற்றும் சிற்பம் பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழிலே நூல்கள் இல்லாத நிலை உள்ளது. சிற்பத்திற்கான நூலாக மயமதம், மானசாரம், சில்பரத்னம், காஸ்யபம் போன்ற நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட ‘சிற்பச்செந்நூல்’ எனும் நூல் மட்டுமே உள்ளது, கட்டடக்கலைக்கான நூல்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் துவக்ககாலத்தில் ஆசிரியர்கள் கிரந்தலிபியிலிருந்த மூல நூல்களை மொழி பெயர்த்து அதனைக் கொண்டு மாணாக்கர்களுக்கு குறிப்புகளை வகுப்பில் கொடுப்பதே வழக்கிலிருந்து வந்தது. அவ்வாறு அக்கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றிய அமரர். திரு.குமரேச ஸ்தபதி அவர்களால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை கல்லூரியின் முன்னாள் மாணாக்கர் திரு. ஜெயராமன் (சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்) அவர்கள் தமது கையேடு ஒன்றில் தொகுத்து பாதுகாத்து வந்துள்ளார். அவரிடமிருந்து பெற்று தற்போது பயிலும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் அச்சேற்றி வழங்கலாம் என்று ஆவலால் ஒரு சில முயற்சியெடுத்து கிடைக்கப் பெற்ற கையேட்டையும் மூலநூல்களையும் ஒப்புமைபடுத்தி பார்த்ததில் கையேட்டிலிருந்த குறைகளை சரிசெய்து மூலநூல்களின்படி அதிஸ்டானம், உபபீடம் போன்றவைகளை முறைப்படுத்தியுள்ளோம்.
மேலும் கையேட்டில் இல்லாத பகுதிகளையும் இணைத்து முழு நூலாக அமைக்கும் நோக்கில்,
மானசாரம், காஸ்யபம் போன்ற நூல்களிலிருந்து பரிவார ஆலயங்களுக்கான அமைப்பிலக்கணமும்,
மானசாரம், மயமத்தில் கூறப்பட்டுள்ள அதிஸ்டான வகைகளையும் மயமதத்தில் இருந்து கோபுர இலக்கணம், ஸ்தூபி இலக்கணம், கர்பந்யாஷம் போன்றவைகளையும்,
மானசாரத்திலிருந்து பிரஸ்தர இலக்கணத்தையும் தொகுத்துள்ளோம்.
மூலநூல்களில் கூறப்பட்டுள்ள முறைகளின்படி வரைபடம் தயாரித்துப் பார்த்து அது தற்போது நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என்று அறியும் வகையில் மயமதத்தில் கூறப்பட்ட ஸ்தூபியின் இலக்கணப்படி ஒப்புமைபடுத்தி ஆய்வு செய்ததில் தாராசுரம் ஜராவதீஸ்வரர் கோயிலின் கோபுர கலசங்கள் சற்றேரக்குறைய மயமதத்தில் கூறப்பட்டுள்ள அங்கங்களை உடையதாக இருந்தது அறிந்தோம்.  இவ்வாறு இன்றைய மாணவர்களும், துறைசார்ந்தோரும் பயன்படுத்தும் வகையில் எவ்வித குறைபாடுகளின்றி வழங்கவேண்டும் என்ற ஆவலில் இத்துறை வல்லுனர்களான மாமல்லபுரம் கட்டிட-சிற்பக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும் முன்னாள் மாணவருமான திரு.தென்னன்மெய்மன் அவர்களையும், கிருஷ்ணகிரி அருங்காட்சியக கண்காணிப்பாளரும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு.  கோவிந்தராஜ் அவர்களையும் தொடர்பு கொண்டு அவர்களது மேலான கருத்துக்களின்படியும் இந்நூல் ஆக்கம்பெற்றது. இந்த நூல் வடிவம் பெறுவதற்கு எழுத்தாளர் ஆதனூர் சோழன் அவர்களின் படைப்பாற்றலைப் பயன்படுத்திக் கொண்டோம். கலை பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் எனும் நம்பிக்கையோடு இந்நூல் எங்களால் வெளியிடப்படுகிறது.
மேலும் இந்நூல் சிறப்பாக அமைய காரணமான கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஐயா திரு. குமரேச ஸ்தபதி அவர்களுக்கும் குறிப்புகளை தொகுத்து கையேட்டை பாதுகாத்து நமக்கு அளித்த முன்னாள் மாணவர் சங்கராபுரம் திரு. ஜெயராமன் அவர்களுக்கும், கல்லூரி முன்னாள் மாணவர்கள் திரு. தென்னன் மெய்மன், திரு.கோவிந்தராஜ்,  எழுத்தாளர் ஆதனூர் சோழன் அவர்களுக்கும் எங்களது நன்றியினை உரித்தாக்குகிறோம்
அ.ச.கணேஷ் ஸ்தபதி எம்.ஏ.,
வை.பாலசுப்பிரமணியன் ஸ்தபதி எம்.ஏ.,
மயன் கிரியேஷன், பெங்களூரு
முனைவர் கி.இராசேந்திரன்
விரிவுரையாளர்
அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, மாமல்லபுரம்
கலைச்செம்மல் த.பாஸ்கரன் பி.எஸ்சி.,
(முன்னாள் விரிவுரையாளர்), கிரியேட்டிவ் ஸ்கல்ப்டர்
நெறியாளுமை
தொகுப்பாசிரியர்கள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “DRAVIDA MARABU KATTIDA KALAI ILAKKANAM – திராவிட மரபுக் கட்டிடக் கலை இலக்கணம்”

Your email address will not be published. Required fields are marked *