உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான். அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும்…


