Description
பெனாசிருக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும்.
டிசம்பர் 28 ஆம் தேதி.
தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெனாசிரின் வாழ்க்கை மிகக் குறுகியது. அதிலும் வெளிநாட்டிலேயே பெரும்பாலும் கழிந்துவிடுகிறது.
சொந்த நாட்டில் தங்க முடியாத அளவுக்குச் சித்திரவதைகளை அனுபவித்தவர் அவர்.
இஸ்லாமிய நாட்டின் தலைவர் என்பதால் சொந்த வாழ்க்கையில் சுவாரஸ்யங்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், அவரைப் பற்றிய விவரங்களைத் தேடும்போது, மர்மமான பல புதிர்களுக்கு விடை கிடைக்கிறது. அது திடுக்கிடும் வகையில் இருக்கிறது.
புட்டோ குடும்பத்தின் தலைமகள் பெனாசிர், பாகிஸ்தானில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால் அவரது தம்பிகள் இருவரும் ஜியா அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அதுவும் வெளிநாட்டில் இருந்தபடியே.
அவர்களுடைய போராட்டம் ஜியாவை பாடாய் படுத்துகிறது. அவர்களுடைய தலைக்கு விலை வைக்கிறார்.
ஒரு தம்பி ஷாநவாஸ், பிரான்சில் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். சாவதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவி மீது அவர் சந்தேகம் தெரிவிக்கிறார்.
காபூலைச் சேர்ந்த அவர், ஜியாவின் ஏஜெண்ட்டாக இருப்பாரோ என்று அவர் அக்காவிடம் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
ஜியா அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வகையில், புட்டோ சகோதரர்கள், பாகிஸ்தான் விமானத்தை கடத்துகிறார்கள். அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
இன்னொரு தம்பி முர்தாஸா அக்காவுடனும், மச்சான் சர்தாரியுடனும் நடத்திய போராட்டத்தை விரிவாக சொல்லியிருக்கிறேன்.
பத்து பர்செண்ட் சர்தாரி என்று பெயர் வாங்கி புட்டோவின் பெயரைக் கெடுக்கும் மச்சானுக்கு பாடம் புகட்ட, அவருடைய பாதி மீசையை ஷேவ் செய்த சம்பவம் இதுவரை கேள்விப்பட்டிராதது.
இந்த வன்மத் தீ, எப்படி முர்தாஸாவின் உயிரைக் குடித்ததது? என்கிற விவரம் திகிலூட்டும்.
முர்தாஸாவின் இறுதி நிகழ்ச்சியில் பெனாசிரை கலந்துகொள்ள அனுமதிக்க மறுத்த சொந்த ஊர்மக்கள், இஸ்லாமிய வழக்கத்துக்கு மாறாக அவரது விதவை மனைவியைக் கொண்டே இறுதி நிகழ்ச்சி நடத்திய கதை வியப்பூட்டுகிறது.
தனது தம்பியின் மகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெனசிர் தவித்த சம்பவமும் புதிது.
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.