Description
ஊழலை எதிர்த்து சில ஆயிரம் உதவாக்கரைகள் நடத்திய போராட்டத்துக்கு 24 மணிநேரமும் போராட்ட இடத்திலேயே முகாமிட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன.
உலகம் உயிர் வாழ உணவு கொடுக்கும் விவசாயிகள் சுமார் ஒன்னரைக் கோடிப் பேர் தங்கள் இன்னுயிரை துச்சமெனக் கருதி டெல்லி செல்லும் நெடுஞ்சாலைகளில் டென்ட் அடித்து உணவு சமைத்து பனியில் நடுங்கியபடி போராடுகிறார்கள். மத்திய அரசின் அடக்குமுறைகளை மீறி நடத்தும் போராட்டத்துக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையே ஏன்?
கார்ப்பரேட் உலகத்தில் இதுதான் நடக்கும். எங்கு எது நடக்கவேண்டும் என்று கார்பரேட் நிறுவனங்கள் நினைக்கின்றனவோ அது நடக்கவேண்டும். அதற்கான பிரச்சார நிறுவனங்கள்தான் ஊடகங்கள்.
ஊடகங்களைப் பயன்படுத்தித்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக புரளியைக் கிளப்பி உலகையே மிரட்டி, கடைசியில் ஈராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்கா கைப்பற்றியது. ஈராக் இப்போது உள்ளுக்குள் அடித்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் ஷன்னி, ஷியா மதப்பிரிவுகள் தங்களுக்கள் யார் பெரியவர் என்ற மோதலில் இருக்கின்றன. சதாம் உசேன் என்ற தலைவர் சிறுபான்மையினராக இருந்தாலும் வல்லரசுகள் அஞ்சும் தலைவராக இருந்தார்.
அவரை ஒழித்த அமெரிக்கா, பாலைவன நாடான லிபியாவை உலகவங்கி கட்டுப்பாட்டிலிருந்து மீட்டவரான, செயற்கை ஏரிகளை உருவாக்கி, பாலைவனத்தை சோலைவனமாக்கிய, லிபியாவை கடனற்ற நாடாக மாற்றிய கடாஃபியை கொன்று அந்த நாட்டையும் சிதைத்தார்ர்கள்.
எகிப்தை, சிரியாவை என்று தங்களுக்குப் பிடிக்காத நாடுகளை, தங்களுடைய கொள்ளைக்கு உதவாத நாடுகளை சிதைத்தனர். அமெரிக்காவை அனுசரித்துப் போகிறவர்கள்தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லையென்றால் மீடியாக்களை பயன்படுத்தி சிதைப்போம் என்று கார்ப்பரேட்டுகள் கங்கனம் கட்டி செயல்படுகிறார்கள்.
லத்தீன் அமெரிக்காவில் வெனிசூலாவை, பொலிவியாவை, சிலியை, எல்சால்வடாரை, அர்ஜென்டினாவை, பிரேசிலை என்று கார்பரேட்டுகளின் வேட்டை தொடர்கிறது.
ட்ரம்ப்பை வைத்து, அமெரிக்காவை தங்கள் பிடிக்குள் கொண்டுவர முயன்றார்கள். ஆனால், அமெரிக்கர்கள் சாதுர்யமாக அதை தவிர்த்து விட்டார்கள். அதற்காக ட்ரம்ப் மட்டுமே கார்பரேட் ஆதரவாளர் என்று அர்த்தமல்ல. அமெரிக்காவை ஆண்ட அதிபர்களில் ட்ரம்ப் மாதிரி ஒரு முட்டாள் இதுவரை யாருமில்லை என்பதே உண்மை.
அதுமாதிரிதான், மோடி மட்டுமே கார்பரேட் ஆதரவாளர் என்று அர்த்தமில்லை. மோடியை மாதிரி முட்டாள் இதுவரை யாரும் இந்தியாவுக்கு பிரதமராக வாய்க்கவில்லை என்பதே உண்மை.
இந்தியாவில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க நிலங்களை கார்ப்பரேட்டுகள் குறிவைத்திருக்கிறார்கள். ஆனால் தஞ்சை மாவட்டத்திலும், உத்தரகாண்டிலும், சேலத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்ப்பரேட்ட்டுகளின் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள்.
எனவேதான், சுற்றுச்சூழல் பிரச்சனைக்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும், வசதியாக பல்வேறு சட்டங்களை மோடி அரசு கொரோனா காலத்தை பயன்படுத்தி நிறைவேற்றிவிட்டது.
இந்த கொடுமைகளை இப்போதே முடிவுக்கு கொண்டுவரவில்லை என்றால், எல்லா வகையிலும் கார்ப்பரேட் அடிமை மோடியின் கொடுங்கரங்கள் மக்களை கொன்று குவிக்கும் சட்டங்களை இயற்றும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகளின் புரட்சிகர போராட்டத்துக்கு ஆதரவளிப்பதே நமது எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது.
எப்போது முடிவு என்றே தெரியாமல் உறுதியோடு போராடும் விவசாயிகளின் தியாகத்தை பதிவு செய்யவே இந்த நூல். இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தை காப்பாற்ற நடத்திய முக்கியமான களங்களையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.
நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.