Sale!

FIDEL CASTRO – ஃபிடல் காஸ்ட்ரோ

Original price was: ₹300.00.Current price is: ₹250.00.

வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன. வாழ்ந்து கொண்டிருக்கிற, அதுவும் சர்ச்சைக்குரிய வாழ்க்கைக்கு சொந்தக்காரரான காஸ்ட்ரோவின் வாழ்க்கையைப் பிசிறின்றி எழுத வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதி முடித்துள்ளேன்.
காஸ்ட்ரோவின் இளவயது வாழ்க்கை குறித்து, அவரே பல விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்து இருக்கிறார்.
அதேசமயம், அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து வேறு சிலர் எழுதிய கட்டுரைகளை அவர் பாராட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவர்களின் எழுத்துக்களில் கிடைத்த தகவல்களையும் இணைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவம், இளவயது வாழ்க்கை, புரட்சியாளராய் உருவான விதம், கியூபா மீதான காஸ்ட்ரோவின் அக்கறை, கியூபாவை மீட்க அவர் சொந்தமாக உருவாக்கிய புரட்சிகரத் திட்டம் ஆகியவை இந்த நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

Description

காஸ்ட்ரோவைப் பற்றிய புதிய பரிமாணத்தை இந்த நூல் தரும். அவரைப்பற்றிய புதிய தகவல்கள் நிச்சயமாக இதில் நிறைந்திருக்கிறது என்பதை உத்தரவாதப்படுத்த முடியும்.
இந்த நூலுக்காக நான் நிறைய விஷயங்களை தேடிச் சேர்த்திருக்கிறேன். அவை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
சேகுவேரா, காஸ்ட்ரோ உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வாழ்க்கைக் கதை தமிழில் முழுமையாக, சுவாரஸ்யமாக தொகுக்கப் படவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதுகுறித்து, ‘ஜனசக்தி’ நாளிதழில் பணிபுரியும்போது, பொறுப்பாசிரியர் திரு. ராயப்பாவிடம் பேசியிருக்கிறேன்.
அவருக்கும் அந்த ஆதங்கம் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, ‘காஸ்ட்ரோவைப் பற்றி தமிழில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் உள்ளன’ என்று அவர் கூறினார்.
எனவே, அந்தக் குறையைப் போக்கும் வகையில் அந்த மாபெரும் தலைவனின் எதார்த்தமான வாழ்க்கையை இயன்றவரை முழுமையாகப் பதிவு செய்ய முயற்சித்துள்ளேன்.
புரட்சி வெற்றிபெற்ற தொடக்க ஆண்டுகளில், புரட்சியைக் காப்பாற்ற, கியூபா மக்களை தயார்ப்படுத்தினார் காஸ்ட்ரோ. அதற்காக அவர் மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய உரைகளை நிகழ்த்தினார்.
மிக நீண்ட அந்த உரைகளின் சாரம் (அந்த உரைகள் ஒவ்வொன்றுமே தனித்தனி நூலாக வெளியிடக் கூடியவை) இதுவரை தமிழில் வந்துள்ளனவா? என்று தெரியவில்லை. ஆனால், நான் இந்த நூலில் வீரம் செறிந்த அந்த உரைகளின் சாரத்தைப் பதிவு செய்துள்ளேன்.
இனி, நூலைப்பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்,
ஆதனூர் சோழன்

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “FIDEL CASTRO – ஃபிடல் காஸ்ட்ரோ”

Your email address will not be published. Required fields are marked *