Sale!

THENNAMERICAVIN THANTHAI SIMON BOLIVAR – தென்னமெரிக்காவின் தந்தை சைமன் பொலிவார்

Original price was: ₹200.00.Current price is: ₹175.00.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தந்தை என்று போற்றப்படும் மாமனிதர் சைமன் பொலிவார்.
ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவு நாடுகள் அனைத்தையும் விடுவித்து ஒரே கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட மனிதநேயர்.
இவர் தொடங்கிய புரட்சி இன்னும் முற்றுப்பெறவில்லை.
அவர் உயிரோடு இருந்தபோதே, அவருடைய கனவை கலைக்கும் முயற்சியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.
சகோதர நாடுகளுக்குள் கலகத் தீயை மூட்டி அந்தக் கதகதப்பில் குளிர் காய்ந்தது அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆனால், இப்போது, ஒவ்வொரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடுகளை கழற்றிவிடுகின்றன. சோஷலிஸம் அங்கு புத்தெழுச்சி பெறத் தொடங்கிவிட்டது.
வெனிசூலா, ஈக்வடார், பொலிவியா, சிலி, பெரு உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளும், கரீபியன் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த நாடுகளும் அமெரிக்க எதிர்ப்பில் அணி சேர்ந்துள்ளன.
மத்திய அமெரிக்காவிலும் பல நாடுகள் தங்களுடைய பூர்வீக அடிமைத்தனத்திலிருந்து மீண்டு லத்தீன் அமெரிக்கா என்ற உணர்வைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
சைமன் பொலிவாரின் வாழ்க்கையையும் அவருடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் விடுதலைக்காக போராடிய நாடுகளின் தொடக்க வரலாறை தெரிந்திருப்பது நல்லது. இந்த நூல் அந்த வரலாறை பதிவு செய்கிறது.

Description

சைமன் பொலிவார்

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தந்தை என்று போற்றப்படும் மாமனிதர்.
ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவு நாடுகள் அனைத்தையும் விடுவித்து ஒரே கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட மனிதநேயர்.
இவர் தொடங்கிய புரட்சி இன்னும் முற்றுப்பெறவில்லை.
அவர் உயிரோடு இருந்தபோதே, அவருடைய கனவை கலைக்கும் முயற்சியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.
சகோதர நாடுகளுக்குள் கலகத் தீயை மூட்டி அந்தக் கதகதப்பில் குளிர் காய்ந்தது அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆனால், இப்போது, ஒவ்வொரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடுகளை கழற்றிவிடுகின்றன. சோஷலிஸம் அங்கு புத்தெழுச்சி பெறத் தொடங்கிவிட்டது.
வெனிசூலா, ஈக்வடார், பொலிவியா, சிலி, பெரு உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளும், கரீபியன் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த நாடுகளும் அமெரிக்க எதிர்ப்பில் அணி சேர்ந்துள்ளன.
மத்திய அமெரிக்காவிலும் பல நாடுகள் தங்களுடைய பூர்வீக அடிமைத்தனத்திலிருந்து மீண்டு லத்தீன் அமெரிக்கா என்ற உணர்வைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
சைமன் பொலிவாரின் வாழ்க்கையையும் அவருடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் விடுதலைக்காக போராடிய நாடுகளின் தொடக்க வரலாறை தெரிந்திருப்பது நல்லது.
ஸ்பானிய ஆதிக்கத்தின் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட நியூ கிரானடா என்ற தேசத்தைப் பற்றியும், பிறகு அதில் இடம்பெற்றிருந்த நாடுகளை விடுவித்து பொலிவார் உருவாக்கிய கிரான் கொலம்பியா கூட்டமைப்பைப் பற்றியும் அடுத்த பக்கங்களில் சுருக்கமாக படியுங்கள்.
பிறகு, அந்த மகத்தான தலைவனின் வாழ்க்கையையும், அரசியல் நேர்மை, நாடுகளின் ஒற்றுமை, அமெரிக்க வல்லூறின் கோரப்பசி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி பொலிவார் கொண்டிருந்த கருத்துகளையும் படியுங்கள்.

-ஆதனூர் சோழன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “THENNAMERICAVIN THANTHAI SIMON BOLIVAR – தென்னமெரிக்காவின் தந்தை சைமன் பொலிவார்”

Your email address will not be published. Required fields are marked *