Description
இந்த நூலில் இரண்டு புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. இரண்டு புரட்சியாளர்களின் பாதைகளும் வேறுபட்டவை. ஆனால் இருவரின் விடுதலைப் போராட்ட உணர்வும் மதிக்கத்தக்கவை.
இருவரிலும் பகத்சிங், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற புரட்சியாளராக கருதப்படுபவர் பகத் சிங்.
தியாகி பகத்சிங் என்று அழைக்கப்படுபவர். இவருடைய குடும்பம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பம். இவருடைய சித்தப்பாக்கள் இருவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சித்திரவதைக்கு ஆளானவர்கள். இரண்டு சித்திகள் கணவரை இழந்து வாழ்ந்தார்கள். சிறுவனாக இருந்தபோதே பிரிட்டிஷ் எதிர்ப்பாளனாக உருவானார் பகத்.
படிக்கும் காலத்தில் புரட்சிகர அமைப்புகளை தீவிரமாக படித்தவர். மார்க்ஸின் கொள்கைகளை படித்தார். பல்வேறு புரட்சிகர அமைப்புகளில் தொடர்பு வைத்திருந்தார். பின்னர் இந்தியாவின் முன்னணி புரட்சியாளர்களில் ஒருவராக உருவானார்.
சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கியவர். லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடத்தியவர். அந்த ஊர்வலத்தில் போலீஸ் தடியடி நடத்தியதில் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றவர். நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கியவர்.
அதில் தானாகவே கைதான பகத்சிங் தனது 23 ஆவது வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட உயிர்த்தியாகம் செய்தார். உயிர்த்தியாகம் செய்வதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்த பகத் திருமணமே செய்து கொள்ளவில்லை.
நவீன இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர்.
சந்திரசேகர் ஆஸாத் அச்சம் அறியாத விடுதலைப் புரட்சியாளர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாவ்ரா என்ற இடத்தில் பிறந்தவர். விடுதலைப் போராட்டக் காலத்தில் புரட்சிகர நடவடிக்கைகள் பலவற்றில் இவர் ஈடுபட்டிருந்தார். ககோரி ரயில் கொள்ளை, நாடாளுமன்ற வெடிகுண்டு வீச்சு, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் கொலை வழக்கு ஆகியவற்றில் இவருடைய பங்கு முக்கியமானது. புரட்சிகர இந்தியாவின் முகமாக இவர் கருதப்படுகிறார்.
சிறுவயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். 15 வயது சிறுவனாக காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிறுவனாக இருந்தும் 15 சவுக்கடிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அப்போதிருந்து இவரை ஆஸாத் என்று அழைத்தார்கள். ஆஸாத் என்றால் விடுதலை என்று அர்த்தம்.
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டதைக் கண்டித்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சோஷலிஸத்தில் நம்பிக்கை கொண்டவர். மற்ற தோழர்களுடன் சேர்ந்து ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அஸோசியேஷன் என்ற அமைப்பை தொடங்கியவர். பகத் சிங்கின் முன்னோடி இவர். எந்த வகையிலும் இந்தியாவுக்கு முழு விடுதலை பெறுவது என்பதில் உறுதியாக இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இப்போதும் இந்தியர்களின் ஹீரோவாக திகழ்பவர்.
பிரிட்டிஷ் போலீஸிடம் சிக்காமல் தவிர்க்க தன்னைத்தானே சுட்டு உயிரிழந்தவர்.
ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இருவருடைய வாழ்க்கைக் கதையையும் ஒரே நூலில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.