Sale!

CHITHARALKAL – சிதறல்கள்

Original price was: ₹150.00.Current price is: ₹125.00.

காதல் ஓர் அழகிய உணர்வு, அனைவரின் வாழ்விலும் காதல் ஒரு முறையேனும் உள்ளக் கதவினை உரசிச் சென்றிருக்கும், விழிக்குள் அவள் விழும் போது காதல் இதயத்தில் எழும். காதலின் முதற் குழந்தையாக கவிதை பிறக்கும். கவிதைகளின் கருவாக அவள் இருப்பாள்.
இத்தகைய இனிமையான காதல் உணர்வின் வார்த்தை வடிவங்களே, இந்தப் புத்தகத்தில் மேலோங்கி நிற்கும் காதல் கவிதைகள். இவை காதலியின் நினைவில் உருகி எழுதியவை அல்ல மாறாக காதலின் உணர்வினை என்னில் விதைக்கத் தானாய் பிறந்தவை.
காதல், தனிமை, வாழ்வியல், தமிழ், இயற்கை என எனது பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடாக இந்தக் கவிதைப் புத்தகம் கோர்க்கப்பட்டுள்ளது. கவிதையின் வரிகளை உணர்ந்து படியுங்கள், ஒவ்வொரு கவிதையும் உங்களிடம் பேசும், காதலின் அழகு தெரியும், வாழ்வில் நம்பிக்கைத் துளிர்க்கும், எதிர்மறை எண்ணங்கள் விலகும், தமிழர் மற்றும் தமிழின் உயர்வு புரியும், இயற்கையின் அழகு பிடிக்கும்.

-கவிஞர் சகாய டர்சியஸ் . பீ

Description

நெஞ்சக் கூட்டிலிருந்து…

தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில், இராஜாக்க மங்கலம் துறை எனும் அழகிய கடற்கரை கிராமத்தில் பிறந்தேன். தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணினி செயல்பாட்டு பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். 2008 ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வருகின்றேன்.
அன்னைத் தமிழ் மீது கொண்ட தீராத காதலால் எனது எண்ண ஓட்டங்களை வார்த்தைகளாக கோர்ப்பதுண்டு, அவ்வாறு எந்தன் இதய அலைகள் அள்ளி வீசிய வார்த்தை முத்துக்களின் கோர்வையே உங்கள் கைகளில் தவழும் எனது முதல் புத்தகமான இந்தச் ‘சிதறல்கள்’.
காதல் ஓர் அழகிய உணர்வு, அனைவரின் வாழ்விலும் காதல் ஒரு முறையேனும் உள்ளக் கதவினை உரசிச் சென்றிருக்கும், விழிக்குள் அவள் விழும் போது காதல் இதயத்தில் எழும். காதலின் முதற் குழந்தையாக கவிதை பிறக்கும். கவிதைகளின் கருவாக அவள் இருப்பாள்.
இத்தகைய இனிமையான காதல் உணர்வின் வார்த்தை வடிவங்களே, இந்தப் புத்தகத்தில் மேலோங்கி நிற்கும் காதல் கவிதைகள். இவை காதலியின் நினைவில் உருகி எழுதியவை அல்ல மாறாக காதலின் உணர்வினை என்னில் விதைக்கத் தானாய் பிறந்தவை.
காதல், தனிமை, வாழ்வியல், தமிழ், இயற்கை என எனது பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடாக இந்தக் கவிதைப் புத்தகம் கோர்க்கப்பட்டுள்ளது. கவிதையின் வரிகளை உணர்ந்து படியுங்கள், ஒவ்வொரு கவிதையும் உங்களிடம் பேசும், காதலின் அழகு தெரியும், வாழ்வில் நம்பிக்கைத் துளிர்க்கும், எதிர்மறை எண்ணங்கள் விலகும், தமிழர் மற்றும் தமிழின் உயர்வு புரியும், இயற்கையின் அழகு பிடிக்கும்.
இந்த புத்தகம் நல்ல முறையில் வெளிவர, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்து என்னை வழி நடத்தி நல்ல ஒரு முகவுரையும் அளித்த அன்பு அண்ணன் திரு. ஆதனூர் சோழன் அவர்களுக்கும், பலதரப்பட்ட வேலைகள் இருந்தும் மன மகிழ்வுடன் அழகானதொரு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த மலேசிய பாடலாசிரியர் திரு. யுவாஜி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மேலும் அச்சிட்டு வெளிவர உதவிய சிபி பதிப்பகத்திற்கும், என்னைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் எனது அன்பு மனைவி ஜெய்ஜா, எனது உடன் பிறந்தவர்கள் பெனிஸ்டன், டோரா மற்றும் அஜய் ஆகியோருக்கும், எனது நெருங்கிய நண்பர்கள் லீனஸ், ஜெமிலா, சுவாமிராஜன் மற்றும் ஹேமநாதன் ஆகியோருக்கும் எனது அன்பு. நிறைவாக எனது முதல் வாசகராகிய உங்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

-சகாய டர்சியூஸ் பீ

Reviews

There are no reviews yet.

Be the first to review “CHITHARALKAL – சிதறல்கள்”

Your email address will not be published. Required fields are marked *