ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி…


