வாழ்வியல் சிந்தனைகள் 10 தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார தந்திரங்களை கொஞ்சம் நவீன மயப்படுத்தி உள்ளார்கள். ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள். இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான். டபிள் ஸ்ரீ, ஜக்கிவாசு போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல்…
-
-
வாழ்வியல் சிந்தனைகள் 9 சாமியார்கள், வழிகாட்டிகள், மகரிஷிகள், குருமகராஜிகள், பகவான்கள், பகவதிகள், அம்மா சாமியாரினிகள், எல்லோரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும். உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 8 சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு…
-
வாழ்வியல் சிந்தனைகள் 7 தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள். அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்கக்கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.…
-
ஒவ்வொரு தேசங்களாக விழுந்து…! பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான். பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக கோரி இருந்தாள். அவனது மனம் தாறு மாறாக கணக்கு போடத் தொடங்கியது. அப்படியே…
-
வாழ்வியல் சிந்தனைகள் 6 அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும் ஒரு திருட்டு புத்தி எப்போதும் ஒளிந்திருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது. அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம். இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள். அதில் வரும் ஒரு வசனம், ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும். அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது…
-
மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்! பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை நிறை வேற்றி கொண்டிருந்தனர். கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று. மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின்…
-
வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 4 நமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு நம்மோடு பிரிக்கவே முடியாதவாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை. இந்த கடவுள் நம்பிக்கை, தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை. கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கின்றன. இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளன. பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு…
-
நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை…




