வாழ்வியல் சிந்தனைகள் 16 உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆன்மிக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது. உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆன்மிக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும். நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை…
-
-
வாழ்வியல் சிந்தனைகள் 15 பய உணர்வு யாருக்கு மிக அதிகம்? பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா? மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது! மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்? இந்த கருத்து உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன. மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய…
-
வாழ்வியல் சிந்தனைகள் 14 நாம் வாழும் இந்த பூமியை பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா? இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது. மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது. எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே…
-
வாழ்வியல் சிந்தனைகள் 13 கடவுளையும் மருந்தையும் கட்டிலும் நீங்கள்தான் உயர்ந்தவர்… எனவே நிமிர்ந்து நில்லுங்கள்! நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது. `இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா? அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள். எவ்வித காணரங்களும் இன்றியே பயந்து…
-
வாழ்வியல் சிந்தனைகள் 12 மனிதகுல வரலாறுதோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது. மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம். அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது. சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும்.…
-
வாழ்வியல் சிந்தனைகள் 11 இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும். இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது. எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக…
-
வாழ்வியல் சிந்தனைகள் 10 தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார தந்திரங்களை கொஞ்சம் நவீன மயப்படுத்தி உள்ளார்கள். ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள். இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான். டபிள் ஸ்ரீ, ஜக்கிவாசு போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 9 சாமியார்கள், வழிகாட்டிகள், மகரிஷிகள், குருமகராஜிகள், பகவான்கள், பகவதிகள், அம்மா சாமியாரினிகள், எல்லோரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும். உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 8 சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு…
-
வாழ்வியல் சிந்தனைகள் 7 தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள். அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்கக்கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.…




