காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு. பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி,…
-
-
மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்றுஇத்தனை காதலிருந்தால்நேரில் சென்று அவளின்இதயப் பள்ளத்தாக்கில் குதிக்கவேண்டும்இல்லையேல் இப்படிநெருப்புத் தழலில் பொசுங்கவேண்டும்என்றபடி சுடருக்குள் பாய்கிறது பெருமழை பொழிந்துதிணறடித்துக்கொண்டிருக்கிறது உன்னழகுஆயுள் காணாத அழகு வெள்ளம்அடித்துப்போகிறது என்னிதயம்உன் அழகின் ஆக்ரமிப்பில்நிலைகுலைந்தவர்களும்நினைவுறைந்தவர்களும்மொழிதிகைத்தவர்களும்நிவாரணம் கேட்டு வரிசையில் நின்றபோதுதான்சேதத்தின் விஸ்தீரணம்சற்றேனும் பிடிபட்டது எனக்குஎல்லோரையும்போல்உதடுபிரியாத புன்னகையையோபிரியமான…
-
5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக…
-
இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து தன் கிளைகளில் கனிந்திருக்கும் பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…
-
13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை கைவிடுங்கள் இப்பழக்கத்தை என குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப் பொந்திடுவதோ…
-
இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன்…
-
ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறது யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம் மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன் அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும் நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது…
-
உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள்…
-
நாம் வாழும் சூரிய மண்டலமும், இதில் உள்ள கோள்களும், நமது சூரிய மண்டலத்தைப் போன்ற லட்சக்கணக்கான சூரிய மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சமும் வியப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நமது பூமி ஒருநாள் அழிந்துவிடும். ஓஸோன் ஓட்டை விரிவடைந்து பூமி வெப்பமயமாகி, வறண்டுவிடும். சூரியனின் ஆற்றல் குறைந்து ஈர்ப்பு விசை வேறுபாடு காரணமாக நமது கோள்கள் அனைத்தும் சூரியனுடன் இணைந்து கருந்துளையாகிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். அதற்காகத்தான் மனிதர்கள் வாழக்கூடிய வகையிலான வேற்றுக் கிரகத்தை…
-
சிலந்தி வலை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சிலந்திவலைக் கூடாரம்? அமேஸான் காடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அலைந்து திரிந்து இந்த மிகச்சிறிய வெண்பட்டு வலைக் கூடாரத்தை கண்டுபிடித்திருக்கிறார் புகழ்பெற்ற வனவியல் நிபுணர் டொரெஸ் பில். சமீபத்தில் இவர் பெரு நாட்டுக்கு சென்றார். அங்கு பரவியுள்ள அமேஸான் காடுகளுக்குள் இவர் ஆய்வு நடத்தினார். அப்போது, ஒரு இலையில் இந்த மிகச்சிறிய வலைக்கூடாரம் இருப்பதை கண்டுபிடித்தார். பிரிட்டனில் ஆதி மனிதர்கள் மிகப்பெரிய கற்களால்…








