Sale!

NAMATHU SOORIYA KUDUMBAMUM VINVELI AARAICHIYUM – நமது சூரியக்குடும்பமும் விண்வெளி ஆராய்ச்சியும்

Original price was: ₹400.00.Current price is: ₹350.00.

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியல் நூலுக்கான பரிசு பெற்ற நூல் இது.

நமது பிரபஞ்சத்தின் எல்லையை இன்னமும் விஞ்ஞாணிகளால் அளவிட முடியவில்லை. அது விரிவடைந்து கொண்டே போகிறது.
புதிய புதிய நட்சத்திர மண்டலங்கள் (கேலக்ஸி) உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பழைய நட்சத்திர மண்டலங்கள் மரணமடைகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியில் தொடங்கிய பெரு வெடிப்பு இன்றைய மாபெரும் அண்டவெளியாக பரந்திருக்கிறது.
யோசிக்கவே மலைப்பாக இருக்கும் நமது பிரபஞ்சம் எப்படி உருவானது? கேலக்ஸிகள் என்றால் என்ன? அவை எத்தனை விதமாக இருக்கின்றன? கேலக்ஸிகளுக்குள் எத்தனை சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன? பிரபஞ்சத்திற்குள் எத்தனை கேலக்ஸிகள் இருக்கின்றன? என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி எல்லோரும் படிக்கும் வகையில் எளிமையாக இந்த நூல் விளக்குகிறது.

இந்த நூல் நமது சூரியக் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி எளிமையாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,
அதுமட்டுமின்றி நமது சூரியக் குடும்பம், கேலக்ஸிகள், பிரபஞ்சம் ஆகியவை குறித்து மனிதன் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் வரலாறு முழுமையாக எளிமையாக இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழில் இப்படி ஒரு நூல் வெளிவந்தது இல்லை என்று கருதுகிறேன். எல்லோருக்கும் புரியும் வகையில் இந்த நூல் இருக்கும் என்றும் நம்புகிறேன்.

Description

நமது சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள கோள்களின் அமைப்பு குறித்து முழு விபரங்களை இந்த நூலில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.
2006 ஆம் ஆண்டு வரை நமது சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இருந்தன. அந்த ஆண்டு பத்தாவது கோள் இருப்பதாக செய்திகள் வந்தன.
சரி, பத்து கோள்கள் ஆகிவிட்டதாக நினைக்கும்போதே, சூரியனை சுற்றும் கோள்கள் இனி எட்டுதான் என வானியல் அறிஞர்கள் அறிவித்தனர்,
2006 ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் சர்வதேச வானியல் அறிஞர்களின் மாநாடு கூடியது,
மாநாட்டின் முதல் நாளன்று சூரியனை சுற்றும் கோள்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தனர்,
ஆனால். மாநாட்டின் இறுதிநாளான 2006 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, சூரியனை சுற்றும் கோள்கள் இனி எட்டுதான் என அறிவித்து விட்டனர்,
ஆம் 75 ஆண்டுகள் ஒன்பதாவது கோளாக கருதப்பட்டு வந்த புளுட்டோ என்ற குள்ளக் கோள் தனது தகுதியை இழந்துவிட்டது,
பத்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸேனா என்ற கோளும் அந்தத் தகுதியை இழந்து விட்டது,
அதுபோல், கோள்கள் பட்டியலில், புதிதாக சேர்க்க விரும்பிய செரஸ் மற்றும் புளுட்டோவின் நிலவான சாரோன் ஆகியவற்றுக்கும் கோள் என்ற தகுதியை அளிக்க மாநாடு மறுத்துவிட்டது,
ஆக, இனி சூரியக் குடும்பத்தின் உறுப்பினர்கள் எட்டுப் பேர்தான், என முடிவாகியது.
எனினும் தகுதி இழந்த புளுட்டோ பற்றிய விபரமும் இந்த நூலில் இருக்கிறது, பத்தாவது கோளாக கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்ட ஸேனா அல்லது ஈரிஸ் குறித்தும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன,
தவிர, புளுட்டோவின் நிலவான சாரோன், வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடையே சுற்றும் செரஸ் ஆகியவை பற்றிய விபரங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன,
இந்த நூல் நமது சூரியக் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி எளிமையாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,
அதுமட்டுமின்றி நமது சூரியக் குடும்பம், கேலக்ஸிகள், பிரபஞ்சம் ஆகியவை குறித்து மனிதன் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் வரலாறு முழுமையாக எளிமையாக இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழில் இப்படி ஒரு நூல் வெளிவந்தது இல்லை என்று கருதுகிறேன். எல்லோருக்கும் புரியும் வகையில் இந்த நூல் இருக்கும் என்றும் நம்புகிறேன்.
நன்றி!

அன்புடன்
ஆதனூர் சோழன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “NAMATHU SOORIYA KUDUMBAMUM VINVELI AARAICHIYUM – நமது சூரியக்குடும்பமும் விண்வெளி ஆராய்ச்சியும்”

Your email address will not be published. Required fields are marked *