Sale!

PERIYAR PAYANITHTHA IYAKKANGAL – பெரியார் பயணித்த இயக்கங்கள்

Author: Chozhan

ISBN: 978-93-94965-17-1

Original price was: ₹650.00.Current price is: ₹550.00.

தந்தை பெரியார் தனது சொந்த வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற்று தனக்கான பாதையை வகுத்துக் கொண்டவர். பள்ளிக் கல்வியை குறைவாக பயின்றாலும், அனுபவக் கல்வியை ஏராளமாக சேர்த்திருந்தார். அரசியலுக்கு வராத காலத்திலேயே ஏராளமான பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றினார். அவருடைய வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்தே ஒளிவு மறைவு இல்லை. தனக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டார். முன்பு தான் செய்த ஒரு காரியம் தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்புக் கோரவும் தயங்கியதில்லை.
மிகப்பெரிய கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரை காங்கிரஸில் சேர்ந்து பணியாற்ற அழைத்தவர் ராஜாஜி. ஆனால், வகுப்புவாரி உரிமையை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் அந்தக் கட்சியில் சேர்ந்தார். காந்தியின் மீது அவருக்கு இருந்த பக்தியால் காங்கிரஸை வளர்க்க பாடுபட்டார்.
ஆனால், பலமுறை அவருடைய வகுப்புவாரி உரிமைக்கான தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களும், உயர்சாதியினரும் தோற்கடித்ததால் அதிலிருந்து வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பின்னர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்தது.
அந்த நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர்மாற்றி, அதை சமூகநீதிக்கான இயக்கமாக தொடர்ந்து நடத்தினார். அவருடைய இந்த இயக்கப் பயணங்கள் குறித்து அவரே பேசிய, எழுதிய குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “PERIYAR PAYANITHTHA IYAKKANGAL – பெரியார் பயணித்த இயக்கங்கள்”

Your email address will not be published. Required fields are marked *