உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் 1720 ஆம் ஆண்டின் கோடைக்காலம் அது. கடற் கொள்ளையருக்கு சொந்தமான ரிவெஞ்ச் என்ற அந்தக் கப்பல் கடல் நடுவே பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் வளைவுப் பகுதியில் ஆனி போனி நின்றிருந்தாள். அழகிய சுருளான செம்பட்டை முடி காற்றில் பறந்தது. பேண்ட்டும் கோட்டும் அணிந்து ஒரு ஆணாகவே மாறியிருந்தாள். தலையில் ஒரு கைக்குட்டையை கட்டியிருந்தாள். ஏதெனும் கப்பல் தெரிகிறதா என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணைப்…


