Trending - Viral

கமல் – ரஜினி பிரிந்தபின் ஒரே நேரத்தில் வெளியான படங்கள்!

இளமை ஊஞ்சலாடுகிறது என்ற திரைப்படம் வெளியான சமயம். தியேட்டர்களில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் செய்த அலப்பறையும் மோதல்களும் மிகப்பெரிய செய்திகளாக பரபரத்தது.

இதையடுத்து ரஜினிக்கு போன் செய்து அழைத்தார் கமல்…

“நமக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. இனி நாம் தனித்தனியே படங்கள் செய்வதுதான் நமது வளர்ச்சிக்கு நல்லது. நமது ரசிகர்களுக்கும் நல்லது.”

கமல் யோசனையை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார் ரஜினி.

தமிழ் சினிமாவில் எம்ஜியார் சிவாஜிக்கு பிறகு, கமலும் ரஜினியும் இப்படி ஒரு முடிவை எடுத்து தமிழ் சினிமாவை அதிர வைத்தார்கள்.

அவர்கள் முடிவெடுத்த பிறகு இருவரும் தனித்தனியாக நடித்து வெளிவந்த படங்கள் கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபது வரை,

அதைப்பற்றி கதை ஆசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம், தான் எழுதிய புத்தகத்தில் இப்படி சொல்கிறார்….

‘இருவருக்கும் தனி ஸ்டைல் உண்டு. ரசிகர்களும் இருக்கிறார்கள். இப்ப தனித்தனியா நடிச்சாதான், நாம வளர முடியும். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா, அது உங்க படமும் இல்லாம என் படமும் இல்லாம ரெண்டுங் கெட்டானாப் போய், ரசிகர்கள் குழம்ப வாய்ப்பு இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார் கமல். ‘இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம்’ என இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

அந்தச் சமயத்தில் அவர்கள் ஒன்றாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஒரே கம்பெனி என்னுடையது தான். அவர்கள் நடிக்கும் படத்தின் கதையை முடிவு செய்து, ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தேன். ‘பஞ்சு அண்ணன் என்ன நினைப்பாரோ!’ என இருவருமே என்னிடம் பேசத்தயங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவருக்குள் ஏதோ பிரச்னை என நான் நினைத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.

எஸ்பி.முத்துராமனை அழைத்து, ‘நீங்க பஞ்சு அண்ணன்கிட்ட எங்களைவெச்சு தனித்தனியா படம் பண்ணச் சொல்லுங்க, பண்றோம்’ எனச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

முத்துராமன் வந்து விஷயத்தைச் சொன்னபோது நான் வருத்தப்படவில்லை. ‘ரெண்டு பேருமே கெட்டிக்காரங்க. ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுத்தான் எனக்கு கதை எழுதத் தெரியுமா… தனித் தனியா நடிக்கணும்னாலும் கதை எழுதத் தெரியும்’ என்றேன்.

இரண்டு படங்களையும் எஸ் பி முத்துராமன் ஒரே நேரத்தில் இயக்க முடியாது என்பதால் அவரையே என்ன செய்வது என்று கேட்டேன்.

“என் உதவி இயக்குநர்கள் முத்து அல்லது ஜி.என்.ரெங்கராஜன் ரெண்டு பேர்ல யாருக் காவது ஒருத்தருக்கு ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுங்க.

இன்னொரு படத்தை நானே பண்றேன்” என்றார். ‘களத்தூர் கண்ணம்மா’ தொடங்கி கமலுக்கு ரெங்கராஜன் நெருக்கம் என்பதால், அவரைத் தேர்வுசெய்தேன். நான் தயார் செய்திருந்த அந்த ஸ்கிரிப்ட்டை ஓரமாக வைத்துவிட்டு, இருவருக்கும் தனித்தனியாக கதை பண்ணலாம் என யோசித்தேன்.

அப்போது கமலுக்கு ஏ கிளாஸ் ரசிகர்கள் அதிகம். அவர் படம் ரிலீஸ் ஆனால், மோட்டார் சைக்கிள், கார்களில் வருபவர்கள்தான் அதிகம். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் கிடைக்காது. படம் அட்வான்ஸ் புக்கிங்கில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், முதல் நாள் முதல் காட்சிக்கே 60 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும்.

ரஜினி அப்படியே நேர் எதிர். 60 பைசா டிக்கெட் பிளாக்கில் கிடைக்கும். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும். காரணம், அப்போது அவர் படங்களுக்கு குடும்பங்களும் பெண் ரசிகைகளும் வருவது குறைவு. ஆயிரம் பேர் வந்தால், அதில் 50 பெண்கள் வருவதே அபூர்வம்.

‘கையைச் சுத்துறது, சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறது… இதெல்லாம் பத்து பதினைஞ்சு படங்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். அப்புறம் அவ்வளவுதான்ப்பா’ என ரஜினி படங்களைப் பற்றி பேசுவார்கள்.

ஆனால், அவருக்குள் மிகச் சிறந்த ஒரு நடிகன் இருக்கிறான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். சண்டையோ, இரட்டை அர்த்த வசனங்களோ, பிரமாண்டமான அரங்குகளோ, எந்தவித ஸ்டைலும் இல்லாமல், குடும்பப்பாங்கான ஒரு கதையை எழுதினேன்.

இன்னும் சொல்லப்போனால், என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சில எழுதியிருந்தேன். விஷயங்களையும் சேர்த்து அந்தக் கதையை

60 பைசா டிக்கெட்டுக்கு ரசிகர்கள் முட்டிமோதக்கூடிய அளவுக்கு, கமலுக்கு செம லோக்கலான ஒரு கமர்ஷியல் படம்…

ரஜினிக்கு பெண் ரசிகைகள் குடும்பம் குடும்பமாக வருவதுபோல ஒரு குடும்பப் படம். இந்த கான்செப்ட்டை மனதில் வைத்து ஒரு வாரத்துக்குள் இருவருக்கும் தனித் தனியாகக் கதைகளைத் தயார்செய்தேன். அந்த இரு கதைகளுமே ஏற்கெனவே ஐடியாவாக இருந்தவை. எப்போதும் 10, 20 கதைகள் வெறும் ஐடியாவாக இருக்கும். தேவைப்படும்போது அதை டெவலப் செய்தால், ஸ்கிரிப்ட்டாகிவிடும்.

ரஜினி படத்துக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன்; கமல் படத்தை இயக்குவது அவரின் உதவி இயக்குநர் ரெங்கராஜன்.

‘பஞ்சு அண்ணன், சீனியர் எஸ்பி.முத்துராமனை ரஜினி படம் பண்ண அனுப்புறார். நமக்கு புது ஆளை அனுப்புறாரே. சரியா வருமா?’ என கமல் ஒரு நிமிஷம்கூட யோசிக்கவில்லை. சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

எளிமையான ஆர்ட்டிஸ்ட், சிம்பிள் புரொடக்ஷன் என ஒரு பக்கம் ரஜினி படம், டபுள் ஆக்ஷன் ஹீரோ, ஸ்ரீதேவி, செந்தாமரை, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், விஸ்.எஸ்.ராகவன் என பெரிய ஆர்ட்டிஸ்ட் பட்டாளத்துடன் இன்னொரு பக்கம் கமல் படம் என பரபரப்பாக ஷூட்டிங் முடித்து வெளியிட்டோம். இரண்டுமே சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ்.

அந்த கமல் படம் ‘கல்யாணராமன்’, ரஜினி படம், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’.

அந்த இரு படங்களுக்கும் இசை, இசைஞானி இளையராஜா. இந்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்களையும் தலைமையேற்று நடத்தியவர் கவிஞர் கண்ணதாசன்.

‘கதை படிப்பதே காவாலித்தனம்’ என நினைத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், பின்நாட்களில் என் சித்தப்பாவும் பிரபல கவிஞருமான கண்ணதாசனிடமே உதவியாளராகச் சேர்வேன் என்றோ, கதாசிரியன் ஆவேன் என்றோ, இந்திய சினிமாவே வியக்கும் கமல், ரஜினியுடன் அதிகப் படங்கள் பணியாற்றுவேன் என்றோ, ஆயிரம் படங்களைக் கடந்துள்ள இசைஞானி இளையராஜாவை அன்று ‘அன்னக்கிளி’யில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றோ நினைத்துகூடப் பார்த்தது இல்லை.

இவ்வாறு அவர் தனது புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *