Description
சுவாரஸ்யமான கேள்வி-பதில்கள்
சூரியனிலிருந்து மூன்றாவது கோள் பூமி. சூரியமண்டலத்தில் உள்ள எட்டுக் கோள்களில் ஐந்தாவது பெரிய கோள். எட்டுக் கோள்களில் நான்குதான் திடக் கோள்கள். இந்த நான்கு கோள்களில் பூமிதான் மிகப் பெரியது. மிக அடர்த்தியானது. பூமியை உலகம் என்றும் ஊதா கோள் என்றும் டெர்ரா என்றும் அழைக்கிறார்கள்.
பூமியில் மனிதர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிரினம் வாழும் கோள் ஆகும். பூமி 454 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. ஆனால், இங்கும் உயிரினம் தோன்றி நூறு கோடி ஆண்டுகளே ஆகின்றன.
பூமியில் அடுத்த 150 கோடி ஆண்டுகளுக்கு உயிரினம் வாழமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்வெளி எல்லையற்றது. முக்கோண வடிவில் விரிந்து பரந்துள்ள விண்வெளியில் ஏராளமான பால்வீதிகளும், நட்சத்திர மண்டலங்களும் அமைந்துள்ளன.
பூமியைப் பற்றியும் விண்வெளியைப் பற்றியும் பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் எளிமையான விடை அளிக்கிறது. மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும் என நம்புகிறேன்.
இயற்கை என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கில வார்த்தை Nature. இந்த ஆங்கில வார்த்தை Natura என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து மருவியது.
இதுவும் கூட Physis என்ற கிரேக்க வார்த்தையின் லத்தீன் மொழி பெயர்ப்புதான்.
இந்த வார்த்தைகளுக்கு தமிழில் என்ன அர்த்தம்?
இயற்கையான உலகில் உயிரினங்கள், தாவரங்களின் இயல்புகளை இது குறிக்கும். மழை பொழிவது, பனி பொழிவது, எரிமலை வெடிப்பது, காற்று வீசுவது என அனைத்து இயற்கை நிகழ்வுகளுக்கும் இந்த புத்தகத்தில் விடை கிடைக்கிறது.
செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், அவற்றுடன் மனித இனத்திற்கு உள்ள தொடர்புகள் இந்த வார்த்தையில் சேராது.
இயற்கை அன்னையின் கொடைகள் அனைத்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை தொடர்பான சந்தேகங்களுக்கு விஞ்ஞானம் விடையளிக்கிறது.
நீண்டகால ஆய்வுகளின் முடிவில் கிடைத்த விடைகள் இவை. குழந்தைகளும் மாணவர்களும் எழுப்பும் பல்வேறு சந்தேகங் களுக்கு விடையளிக்க முடியாமல் திணறும் பெரியவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
இனி அந்த தயக்கம் தேவையில்லை. இந்த புத்தகம் எளிய விளக்கங்களை அளிக்கிறது. அந்த விளக்கங்கள் பெரியவர்களையும் சிறுவர்களையும் திருப்திப்படுத்தும் என்பது நிச்சயம்.
சுவாரஸ்மான இந்த கேள்வி பதில்களுக்கு உரிய படங்களும் இடம்பெற்று இருக்கிறது.
புதிய விஷயங்களை கண்டுபிடித்து, மனித அறிவை வளர்த்துக் கொள்வது. தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் எல்லாவற்றையும் பற்றி புரிந்துகொள்வது தான் அறிவியல்.
மனித இனமும், இதர விலங்கினங்களும் அவற்றின் இயற்கை சூழ்நிலைகளுக்கு தக்கவாறு வாழ்வதற்கு தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவுகின்றன. இயற்கை வளங்களை தங்களுக்குத் தக்கவாறு மாற்றி எளிய கருவிகளாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை மனித இனம் அறிந்துள் ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்து உணவை சமைத்து சாப்பிட்டான். சக்கரத்தைக் கண்டு பிடித்து எளிதில் இடம் மாறினான். நவீன காலத்தில் அச்சகங்களையும், தொலைபேசியையும், இணையதளங்களையும் கண்டுபிடித்து தகவல் தொடர்புக்கான வசதிகளை எளிமைப்படுத்தினான். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை எளிதில் பரிமாற முடிகிறது.
அதேசமயம், அமைதியான வழிக்கு மட்டுமின்றி அழிவுக்கான தொழில்நுட்பங்களையும் மனிதன் கண்டுபிடித்தான். அணு ஆயுதங்கள் இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.
இந்தப் புத்தகம் மனித இனத்தின் வாழ்க்கைச் சவுகரியங் களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் எப்படி இயங்குகின்றன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
அன்புடன்
அ.சோழராஜன்





Reviews
There are no reviews yet.