Description
ஒரு மனிதனின¢ ஒரு நாள் வயிற்றுத் தேவை ஒரு முட்டையும் 200 மில்லி பாலும் போதும் என்கிறார்கள். இதுவே அவனுடைய அன்றைய சக்திக்கு போதும் எனும்போது, கண்டதையும் தின்று வயிற்றை பாடாய் படுத்தி, நாமும் மூச்சுத் திணறுகிறோம்.
மக்களில் பெரும்பாலோர் தங்களது உடல்நலனைப் பற்றி தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ஏனெனில், நவீன மருத்துவம், மனிதர்களின் உடல் குறித்து முழுவதுமாக ஆய்வு செய்வதில்லை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சிகிச்சை அளிக்கும் முறையையே மருத்துவர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர். உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உணவில் இருக்கும் பொருட்கள் மூலம் மட்டுமே, உடலின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளும் சிறப்பாக செயல்பட முடியும். அப்படியென்றால், அந்த உணவு, உடல் முழுமைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கூற முடியாது. உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது, அதன் முக்கிய தன்மைகளை விரிவாக கணக்கில் கொள்ள வேண்டும். உணவில் இருக்கும் ஒரு பொருளை வைத்துக்கொண்டு, அதனை நல்லதா அல்லது கெட்டதா என்று முடிவு செய்யக்கூடாது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள், புரோட்டீனை எடுத்துக் கொள்வதற்கு மாமிச உணவுகளையே பயன்படுத்துகின்றனர். அசைவ உணவிலிருந்து பலமும், சக்தியும் கிடைப்பதாக விளம்பரம் செய்யப்படுவதே இதற்கு காரணம். அடிப்படை புரோட்டீன்கள், தாவர உணவிலிருந்து கிடைக்கிறதா அல்லது விலங்குகளிடமிருந்து கிடைக்கிறதா என்பதை மருத்துவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அப்படியென்றால், சைவ உணவை பயன்படுத்துமாறு அவர்கள் ஏன் அறிவுரை வழங்கவில்லை?
மாமிசங்களுக்கும், மீனுக்கும் வேறுபாடு உள்ளது. அதாவது, மாமிசங்களில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கக் கூடியது. ஆனால், மீன்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நன்மை விளைவிக்கக் கூடியது.
மீன்கள் குளுமையான உடலமைப்பு கொண்டவை. இயல்பான நிலையில், அதன் வெப்பநிலை, மனித உடல் வெப்பநிலையை விட குறைவாகவே இருக்கும். மனித உடலுக்குள் மீன் உணவு சென்றால் என்ன மாற்றம் ஏற்படும்? கொழுப்பை வாணலியில் போட்டு வதக்குவது போல, கொழுப்பு உருகி திரவமாக மாறிவிடும். மீன்களில் உள்ள எண்ணெய், மனித ரத்தக் குழாயில் நுழையும்போது, ரத்தம் திரவமாக மாறும்,
சிறு தாவரங்களுக்கு அளவுக்கு அதிகமாக நீரை ஊற்றும்போது, அதன் வேர்ப்பகுதி அழுகி, தாவரம் இறந்துவிடும். நீர்த் தாவரங்களுக்கு என்று காலஅளவும், தண்ணீர் தேவையும் மாறுபடுகிறது. மனிதர்கள் பருகுவதற்கான நீரின் அளவும் அதைப் போன்றதே.
மனிதஉடல் பெரும்பாலும் நீரினால் உருவாக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் 80 சதவீதம் நீரால் உருவாகிறது. பெரியவர்கள் 60-70 சதவீத நீராலும், வயதானவர்கள் 50-60 சதவீத நீராலும் அமைகின்றனர்.
இந்த நூல் நமது உடல் தேவையை எப்படி நிறைவேற்ற வேண்டும், எதெல்லாம் நமக்கு ஆரோக்கியம் தரும் என்று குறிப்புகளை தருகிறது.
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.