Sale!

OVVORUNAALUM… – ஒவ்வொரு நாளும்…

Original price was: ₹140.00.Current price is: ₹120.00.

இது ஒரு வித்தியாசமான கவிதைத் தொகுப்பு…

“நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள்தான்,
தமிழையும் தமிழரையும் தலைநிமிரச் செய்யும்.

ஏட்டுப் படிப்பைக் காட்டிலும்
அனுபவங்கள் நமக்குக் கற்றுத்தரும்
பாடங்கள்தான் முக்கியமானவை.

அனுபவங்கள் எல்லோருக்கும்
ஒரே மாதிரி அமைவதில்லை.

நான் வாழ்க்கையை அதன் போக்கில்
அனுபவித்து வாழ வேண்டும் என்பவன்.

முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே.
நினைக்கிற வாழ்க்கையை அடைய முடியும்.

தூரம் அதிகம் என்றாலும்
நேர் பாதைப் பயணம் தருகிற சுகமே தனிதான்.

எனது கவிதைகள்,
எனக்கு நானே ஊட்டிக்கொண்ட
நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

இவற்றில்,
விரக்தியின் நிழல் சற்றும் படிந்திருக்காது.” என்கிறார் கவிஞர். இது வாசகர்களுக்கு புதிய அனுபவத்தையும் பழைய நினைவுகளையும் ஒரு சேரத் தரும்…

Description

வசீகரிக்கும் வாழ்க்கை!

வாழ்க்கை எல்லோருக்குமே வசீகரமானதுதான்.
அடுக்கடுக்காய் தோல்விகள் வந்தாலும்
தோல்விகளை வகை பிரிக்க தெரிந்திருந்தால்
வெற்றி எளிதாகும்!

வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோருமே
தோல்வியை ருசித்தவர்கள்தான்!

நம்முடையதைக் காட்டிலும் மிக இருண்ட
காலகட்டத்தில் வசித்தவன் பாரதி.
எடுத்த காரியங்கள் அனைத்திலுமே
தோல்வியைச் சந்தித்தவன் அவன்.

ஆனால்,
விடுதலை பெறுவதற்கு முன்னரே,
“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்றானே!

நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள்தான்,
தமிழையும் தமிழரையும் தலைநிமிரச் செய்யும்.

ஏட்டுப் படிப்பைக் காட்டிலும்
அனுபவங்கள் நமக்குக் கற்றுத்தரும்
பாடங்கள்தான் முக்கியமானவை.

அனுபவங்கள் எல்லோருக்கும்
ஒரே மாதிரி அமைவதில்லை.

நான் வாழ்க்கையை அதன் போக்கில்
அனுபவித்து வாழ வேண்டும் என்பவன்.

முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே.
நினைக்கிற வாழ்க்கையை அடைய முடியும்.

தூரம் அதிகம் என்றாலும்
நேர் பாதைப் பயணம் தருகிற சுகமே தனிதான்.

எனது கவிதைகள்,
எனக்கு நானே ஊட்டிக்கொண்ட
நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

இவற்றில்,
விரக்தியின் நிழல் சற்றும் படிந்திருக்காது.

இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை
எனது திருமணத்தின் போது (1989)
நூலாக வெளியிடப்பட்டவை.

அனுபவக்கடலில் மூழ்கிச் சேகரித்த
முத்துக்கள் இவை.
இவற்றில் ஒளி மிகுந்ததும் இருக்கும்.
ஒளி குறைந்ததும் இருக்கும்.

ஆனால், முத்துக்களைச் சேகரித்த
அனுபவங்கள் குன்றா ஒளி மிகுந்தவை.
தமிழ் அன்னைக்கு இவை என் காணிக்கை.

அன்புடன்
ஆதனூர் சோழன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “OVVORUNAALUM… – ஒவ்வொரு நாளும்…”

Your email address will not be published. Required fields are marked *