Sale!

MAAMETHAI LENIN – மாமேதை லெனின்

Original price was: ₹350.00.Current price is: ₹300.00.

ரஷ்யாவில் பிறந்த டேவிட் ஷூப், 1903-ல் லெனின் தலைமை தாங்கிய சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருந்தவர். புரட்சியில் பங்கு கொண்டதற்காக 1906-ல் கைது செய்யப்பட்டு ஸைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர். லெனின், டிராட்ஸ்கி, புகாரின் போன்ற புரட்சி தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
அதனால்தான் அவருடைய நூலில் லெனினைப் பற்றிய புதிய விஷயங்கள் இடம்பெற்று இருக்கும்.
லெனின் ஆரம்பகால வாழ்க்கையில் தொடங்கி ரஷ்ய புரட்சியுடன் பின்னிக்கிடந்த அவரது வாழ்க்கையை அவருடைய லட்சியங்களுடன் இணைத்து எழுதியிருப்பார்.
மரியா பிரிலெழாயெவா எழுதிய நூல் லெனின் அவர்களுடைய வாழ்க்கையை அவருக்கு அருகிலிருந்து அவருடன் சேர்ந்து வாழ்வதைப் போல இருக்கும்.
மற்ற இருவரின் பார்வையில் இருந்து குரூப்ஸ்கயாவின் பார்வையில் லெனின் அவர்களின் வாழ்க்கை மற்றொரு கோணத்தில் இருக்கும்.
எனது இந்த நூல் இதுவரை இல்லாத வகையில் லெனின் வாழ்க்கையை முற்றிலும் சுவாரசியமாக சொல்லும் முயற்சி ஆகும்.
எளிய தமிழில் ரஷ்ய புரட்சியையும் மாமேதை லெனின் அவர்களின் வாழ்க்கையையும் அவருடைய சாகஸங்களையும், சாதனைகளையும் தொகுத்து இருப்பதாக நினைக்கிறேன்.
முக்கியமாக லெனின் வாழ்க்கை குறித்த நிகழ்வுகளின் படங்களை மிகவும் நேரம் செலவழித்து தேடி எடுத்துச் சேர்த்திருக்கிறேன். இந்த படங்கள் நூலை வாசிக்கும்போது புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

Description

மாமேதை லெனின் அவர்களுடைய வார்த்தைகள், இன்றைக்கும் உலகின் பெரும்பகுதி மக்களுடைய தலை எழுத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
“லெனின் எங்கள் ஆசிரியர். சோவியத் மக்களாகிய நாங்கள் அவரது சீடர்கள்” என்றார் மறைந்த சோவியத் ஜனாதிபதி ஸ்டாலின்.
ரஷ்யப் புரட்சியின் தந்தையான லெனின் அவர்களோடு பழகி, அவருடைய அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டவர் டேவிட் ஷூப்.
அவரும் மரியா பிரிலெழாயெவா உள்ளிட்ட பலரும் லெனின் அவர்களுடைய வாழ்க்கையை எழுதியுள்ளனர். இவர்களுடைய நூல்களைப் படித்திருக்கிறேன்.
லெனின் அவர்களின் காதல் மனைவி நதேழ்தா கான்ஸ்டன்தீனவ்னா குரூப்ஸ்கயா என்ற நாதியாவும் லெனின் பற்றிய தனது நினைவுகளை எழுதியிருக்கிறார்.
இவர்களில் டேவிட் ஷூப் நூலில் கூடுதல் விவரங்கள் இருக்கும்.
ஏனென்றால், ரஷ்யாவில் பிறந்த டேவிட் ஷூப், 1903-ல் லெனின் தலைமை தாங்கிய சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருந்தவர். புரட்சியில் பங்கு கொண்டதற்காக 1906-ல் கைது செய்யப்பட்டு ஸைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர். லெனின், டிராட்ஸ்கி, புகாரின் போன்ற புரட்சி தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
அதனால்தான் அவருடைய நூலில் லெனினைப் பற்றிய புதிய விஷயங்கள் இடம்பெற்று இருக்கும்.
லெனின் ஆரம்பகால வாழ்க்கையில் தொடங்கி ரஷ்ய புரட்சியுடன் பின்னிக்கிடந்த அவரது வாழ்க்கையை அவருடைய லட்சியங்களுடன் இணைத்து எழுதியிருப்பார்.
மரியா பிரிலெழாயெவா எழுதிய நூல் லெனின் அவர்களுடைய வாழ்க்கையை அவருக்கு அருகிலிருந்து அவருடன் சேர்ந்து வாழ்வதைப் போல இருக்கும்.
மற்ற இருவரின் பார்வையில் இருந்து குரூப்ஸ்கயாவின் பார்வையில் லெனின் அவர்களின் வாழ்க்கை மற்றொரு கோணத்தில் இருக்கும்.
எனது இந்த நூல் இதுவரை இல்லாத வகையில் லெனின் வாழ்க்கையை முற்றிலும் சுவாரசியமாக சொல்லும் முயற்சி ஆகும்.
எளிய தமிழில் ரஷ்ய புரட்சியையும் மாமேதை லெனின் அவர்களின் வாழ்க்கையையும் அவருடைய சாகஸங்களையும், சாதனைகளையும் தொகுத்து இருப்பதாக நினைக்கிறேன்.
முக்கியமாக லெனின் வாழ்க்கை குறித்த நிகழ்வுகளின் படங்களை மிகவும் நேரம் செலவழித்து தேடி எடுத்துச் சேர்த்திருக்கிறேன். இந்த படங்கள் நூலை வாசிக்கும்போது புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
அதுவரை உலகில் நிலவிய ஆட்சி முறையை அடியோடு மாற்றி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சியை நிறுவியவர். சோஷலிஸ அரசாங்கத்தை அமைத்துக் காட்டிய மாமேதை. அவரைப் பற்றி இன்றைய தலைமுறை எளிய முறையில் அறிய எனது இந்த முயற்சி உதவியாக இருந்தால் மகிழ்வேன்.

-ஆதனூர் சோழன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “MAAMETHAI LENIN – மாமேதை லெனின்”

Your email address will not be published. Required fields are marked *