அரசியல்

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லையா? – கவிஞர் சகாய டர்சியஸ் பீ

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. வாதம் வேண்டாம் ஆவணங்களே பதில் சொல்லும்.

ஆதாரம் 1: காவல்துறையின் தடுப்புக்காவல் ஆணை

தலைப்பு: GROUNDS FOR DETENTION

ஆணை எண்: Order No. 39/76

அதில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது:

“M.K. Stalin (23) s/o M. Karunanidhi, 7/4, 4th Street, South Gopalapuram, Madras is an activist in the Dravida Munnetra Kazhagam…”

“…It is therefore necessary that he be detained under Section 3(1)(a)(ii) read with Section 3(2)(c) of the Maintenance of Internal Security Act, 1971.”

கையொப்பமிட்டவர்: Addl. Inspector General and Commissioner of Police, Madras.

அந்த ஆணையில் அவர் மீது சுமத்தப்பட்ட “குற்றங்கள்” என்ன தெரியுமா?

– கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்

– அவசரநிலைக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புகிறார்

– “anti-national, anti-emergency and anti-integration views” கொண்டவர்

அவ்வளவுதான். ஒரு 23 வயது இளைஞனை விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்க இதுவே காரணமாக்கப்பட்டது.

ஆதாரம் 2: இந்திய நாடாளுமன்றப் பதிவு

மாநிலங்களவை, 1976 மார்ச் 8 “Resolution re Proclamation by President relating to Tamil Nadu” விவாதம் (columns 137–138).

திமுக உறுப்பினர் ஜி. லட்சுமணன் அவையிலேயே பதிவு செய்தார் . ஸ்டாலின் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதையும், சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமான அவரது மனைவிக்குப் பத்து நாட்கள் கணவரைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதையும். மிசாவின் கீழ் கைதானவர்கள் தாக்கப்பட்டதையும் அவர் அவையில் குற்றம் சாட்டினார்.

இது ஒரு கட்சிப் பிரசுரம் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவு. இன்றும் Rajya Sabha Digital Library-ல் யாரும் தேடிப் பார்க்கலாம்.

நடந்தது இதுதான்:

1976 ஜனவரி 31 கலைஞர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி. அதே இரவு போலீஸ் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது கலைஞரைத் தேடி அல்ல, அவரது மகனைத் தேடி. பிப்ரவரி 1-ல் ஸ்டாலின் கைது. சென்னை மத்திய சிறை. வயது 23. திருமணமாகி ஆறே மாதங்கள்.

சிறையில் அவர் தாக்கப்பட்டபோது, அவரைக் காக்கத் தன் உடலை மறைத்து நின்ற முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, அந்தத் தாக்குதலின் விளைவாக உயிரிழந்தார். அது ஒரு கற்பனைக் கதை அல்ல, திராவிட இயக்க வரலாற்றின் ரத்தக் கறை படிந்த பக்கம்.

வரலாற்றை மாற்றி எழுத முடியாது. ஆவணங்கள் பேசும்.

#அவசரநிலை#MISA#Emergency1975#TamilNaduHistory#FactCheck

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *