திமுக இனி நாகரிக அரசியலைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, Attack Mode-க்கு மாறுவது நல்லது.!!
சர்க்காரியா கமிஷன், கட்சி நிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு,
விஜய் ஒன்றும் புனிதன் கிடையாது.. நடிகராக இருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் தவறுகள், வரி ஏய்ப்பு, விஜய் மீது முன்வைக்கப்படும் கருப்புப் பணக் குற்றச்சாட்டுகள், அவரது கட்சியினரின் செயல்பாடுகள், தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படும் முறைகேடுகள் என அனைத்தையும் திமுக பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டிம்.. குறிப்பாக, சுரங்கத்துறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அதேபோல், அமலாக்கத்துறை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்விகளை எழுப்ப வேண்டும். இப்போது வாயை மூடிக்கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களும் அப்போது அதெல்லாம் அவதூறு என்று வருவார்கள்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜயின் உரை குறித்து சமூக வலைத்தளங்கில் பரவும் மீம்ஸ்
DMK should strictly follow Attack Mode. அவன் கேள்வி கேட்டு, நாம பதில் சொல்லிக் கொண்டிருப்பதைவிட, அவனையே பதில் சொல்ல வைக்க வேண்டும்.!!
மூன்று மாத ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு இருக்காது. ஆனால், இவர்களின் கோமாளித்தனமான செயல்பாடுகளுக்கு எதிராக மூன்று மாதங்களிலேயே மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் வைரமுத்து, சபாநாயகர் நன்றாக செயல்படுகிறார் என்று திமுக தலைவர் கூறியதாக முகநூலில் பதிவிட்டிருந்தார். முதலில், தலைவர் வைரமுத்து போன்ற நபர்களை வீட்டிற்குள் விடுவதையே நிறுத்த வேண்டும்.
இந்தக் கட்சிக்காக உழைப்பதும், இனி உழைக்கப் போவதும் கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும்தான். எதிர்வரும் காலம் எப்படி இருந்தாலும், திமுகவின் எதிர்காலத்தை திமுகவும், அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் நிர்ணயிக்க வேண்டும்.!!



