Trending - அரசியல்

தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்பவுமே நேரிடையாகவும் சமூகப் பொறுப்புணர்வுடனும் பேசக்கூடியவர். அவர் தான் நடத்தும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் பேசிய வார்த்தைகளை தவெக ஆட்கள் பெரிய பிரச்சனையாக மாற்றினர்.

அவருக்கு எதிராக ரூட் மாபியா ஆட்களை வைத்து அவர் பேசியது தங்களுடைய தலைவர் விஜயைத்தான் என்று பரப்பினார்கள். விஜய் சேதுபதியும் பங்கேற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியில் விஜய் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக டைரக்டர் அட்லீ பேசினார்.

அதேநிகழ்ச்சியில் அடுத்துப் பேசிய விஜய் சேதுபதி அறிவு இல்லாதவனிடம் அறிவாளி பேசி ஜெயிக்க முடியாது என்ற பெரியாரின் வார்த்தைகளை வேறுவிதமாக பேசி அட்லீக்கு பதில் சொன்னார். அதைக்கூட புரியாமல் அட்லீயும் கைதட்டி ரசித்தார்.

இதெல்லாம் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலான நேரத்தில், விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக சில விளக்கங்களை கொடுத்து மேலும் சூடாக்கியிருக்கிறார்.

தனது விளக்கத்தில்,

“இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பேசும் கருத்து மொத்தமும் இங்கே இருக்கும் போட்டியாளர்களை குறித்து மட்டுமே தவிர,

வேறேந்த இயக்கத்தையும், தனிநபரையும் குறித்து அல்ல என்று கூற கடமை பட்டுள்ளேன்…

இதெல்லாம் உங்களுக்கு சொல்லமலே புரியும்னு நினைச்சேன். ஆனா உங்களுக்குப் புரியல…” என்று கூறினார்.

அடுத்து இரண்டாவதாக பிக்பாஸ் போட்டியாளர்குக்கு அறிவுரை கூறுவதைப்போல இந்த விஷயத்தைக் கூறினார். அதாவது..

“விமர்சனங்களை எதிர்கொள்ள கத்துக்கனும். ஒருநாளும் அதை கண்டு பயப்பட கூடாது,அதை நேரிடையாக சந்திக்கனும்…” என்றார்.

அடுத்ததாக அதே போட்டியாளர்களிடம்…

“நான் உங்களை எங்கேயும் தவறா சித்தரிக்கல. சாதாரணமா தான் பேசுறேன், ஆனா நீங்களேதான் உங்களை கீழ போட்டு தரம் தாழ்த்திக்குறிங்க…” என்று கூறினார்.

அவருடைய இந்த விளக்கத்தை பார்த்த தவெக ஆட்கள், அவர் தங்களைப் பார்த்து பயந்து விட்டதாக பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

ஆனால், நிஜத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் தவெக ஆட்களின் தற்குறித்தனங்களை போட்டுப் பொளக்கப் போகிறார் விஜய் சேதுபதி என்றே அறிவார்ந்த பார்வையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *