Trending - கட்டுரைகள்

எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

திருச்சி சமயபுரத்தில், முழுமையாக விவசாயக்கடனை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க… போராடும் விவசாயிகள் பந்தல் போடுவதற்கு போலீஸ் அனுமதிக்கல… விவசாயிகளுக்காக காய்ச்சிய கஞ்சியையும் கொண்டுவர போலீஸ் அனுமதிக்கல… இத்தனை அடக்குமுறைகளை செய்துட்டு… தற்போது விவசாயிகளை சந்தித்து பேசிட்டு இருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்! அவரோட கடுமையான உடல்மொழியை பாருங்க… இதுவா விவசாயிகளிடம் சமாதானம் பேசும் உடல்மொழி? விவசாயத்துறை அமைச்சர், பக்கத்துல தேமேன்னு உட்கார்ந்திருக்கார்!

அப்போ அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கெட்டிக்காரரான்னு பார்த்தால், மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பரபரப்பாக இயங்கியவர் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தான்…. அதேவேளை, நிர்மல் குமாரோட மின் துறை சார்ந்த கேள்விக்கெல்லாம் ஆதவ் அர்ஜுனா பதில் சொல்வார்… இப்டி சங்கிலித்தொடர் மாதிரி போயிட்டே இருக்கும்… 😃😃

இதுல என்ன விஷயம்னா, யாருக்கும் அவங்கவங்க துறை சார்ந்த நாலெட்ஜ் கிடையாது! ஒரு சிலர், கத்துக்கணும்னாவது நினைக்கிறாங்க… இன்னும் சிலர் பெருசா கண்டுக்கறதேயில்ல… சொல்லப்போனால், பொதுமக்களின் பிரச்சனை என்ன, அவங்களோட கஷ்டம் என்னன்னு கூட அமைச்சர்களில் முக்கால்வாசி பேருக்கு தெரியாது! ரசிகர் மன்றம் வச்சு, எப்படா படம் வரும்… கட்டவுட் வைப்போம்… வைப் பண்ணுவோம்னு கொஞ்சம் சொகுசா வாழ்ந்திருப்பாங்க… வீட்டை பற்றி கூட சிந்திக்காம வளர்ந்திருப்பாங்க! அவங்கட்ட திடீர்னு நாட்டு மக்களுக்கான பெரிய பொறுப்பை தூக்கிக்கொடுத்தால் திணறத்தான செய்வாங்க!

அதான், மச்சான், என்னோட டிபார்ட்மென்ட்ல பிரச்சனைடா… உடனே வாடான்னு அவங்கள இவங்க கூப்பிடுறதும்… இவங்கள அவங்க கூப்பிடுறதும்… ஒருத்தர் இன்னொருத்தருக்காக பேசுறதுமா பண்ணிட்டு இருக்காங்க! இதுல முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சனையா…. தூய்மை பணியாளர்கள் பிரச்சனையா… மருத்துவர்கள் பிரச்சனையா… பக்தர்கள் பிரச்சனையா… குடிநீர் பிரச்சனையா… எந்த பிரச்சனைக்கும் வாய் திறக்க மாட்டார்… பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்… ஆனால் தேவதூதர் மாதிரி திடீர்னு மக்கள் முன்னாடி காட்சி தருவார்… ஆர்ட்டீன் விடுவார்… கைய கழுத்துக்கு குறுக்கால நீட்டி ஆக்சன் காட்டுவார்…. இன்ஃப்ளூயன்ஸர் ஜோம்பிகள் உடனே ‘பாத்துட்டேன்… பாத்துட்டேன்… நேர்ல பாத்துட்டேன்!’னு கத்தி கூப்பாடு போடுங்க!… இதுதான் இப்ப வழக்கமா நடக்குது!!

எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *