பூனைக்குட்டி வெளியே வருகிறதா? மின்வெட்டு என்பது திட்டமிட்ட நாடகமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அதாவது, அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காகவும், அதில் கொள்ளை அடிக்கவும்தான் இந்த மின்வெட்டு நாடகத்தை தவெக நடத்துகிறதோ என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
விஜயின் தவெக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்புவரை தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத சூழலே நிலவியது. விஜய் ஆட்சிக்கு வந்ததுமே மின்வெட்டு தொடர்கதையாகிவருகிறது. முதலில் திமுகவினர் ஃப்யூஸ் கேரியரை பிடுங்குவதாக மின் துறை அமைச்சர் பேசத்தொடங்கினார்… பின்னர், பராமரிப்புப்பணிகள் செய்யாததால் மின் தடை என்றார்… பின்னர், மின்வெட்டுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன… இதை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை. ஆளுங்கட்சியின் நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும்கூட மின்வெட்டு ஏற்பட்டது. இதன்மூலம், மின்சாரத்தட்டுப்பாடு அதிகமிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். இந்நிலையில் ஜூன் மாதம் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6 முதல் ரூ.9 வரை கொள்முதல் செய்துவந்த தமிழ்நாடு மின்சாரத்துறை, மின்சாரக் கொள்முதல் விலையை மூன்றே மாதத்தில் யூனிட்டுக்கு 20 ரூபாயாக உயர்த்தினார்கள்!
அதை சரிக்கட்ட, விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு அமலானது. என்ன காரணமென்றே சொல்லவில்லை… 1000 ரூபாய் செலுத்தி வந்தவர்கள், 6000 ரூபாய் அளவுக்கு கட்டவேண்டி வந்தது… இதுபோல் அனைவருக்கும் பன்மடங்கு மின்கட்டணம் வருகிறது… மின்சாரத்துறை அமைச்சரோ, விஜயோ இதுவரை இதற்கான சரியான காரணத்தை சொல்லவேயில்லை. மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் வேலையை இந்த அரசு செய்வதாகத் தெளிவாகத் தெரிகிறது! தவெகவின் நாஞ்சில் சம்பத்தே 3000 ரூபாய் மின்கட்டணம், தங்களுக்கு 16,.500 என வந்ததாக போட்டுடைத்தார்.
அதோடு நிறுத்தாமல்,பஞ்சாப்பில் 14 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது… அதுபோல் தமிழ்நாட்டில் பெரிதாக இல்லை என்றார் இதே நிர்மல்குமார். பின்னர், எல்நினோவால் வெப்பம் அதிகரித்துள்ளது… பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற பேச்சை இதே நிர்மல்குமார் தொடர்ந்தார். அடுத்து, தலைமை செயலகத்திலேயே மின்வெட்டு இருப்பதாக செய்தியை கொண்டுவந்தார்கள்! எல்லாமே திட்டமிடல் போலவே இருக்கிறது!
இந்நிலையில் தற்போது, யூனிட் ரூ.35 விலையில் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கவுள்ளதாக அதிர்ச்சிகரமான செய்தியை தவெக அரசு வெளியிட்டுள்ளது! குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 500% மின் கொள்முதல் விலை உயர்கிறது! இதற்கு இவர்கள் சொல்வது… “மின்வெட்டை சமாளிக்க!” அப்படியானால் மின்கட்டணம் இன்னும் இன்னும் உயரும்! இது மிகமிக மோசமான ஊழ்ல்! இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதால் அவர்களுக்கு தெம்பு வந்துள்ளது… இனி என்ன செய்தாலும் மக்களை ஏமாற்றுவது எளிது… நம்மை முழுதாக நம்புகிறார்கள்… துணிந்து இறங்குகிறார்கள்! அவர்களோடு இருக்கும் கூட்டணிக்கட்சிகளும் புள்ளப்பூச்சிகளாகிவிட்டார்கள் என்ற தைரியத்தில் இம்முடிவை எடுத்துள்ளார்கள்!
இந்த நிர்மல்குமார் யாருக்காக வேலை செய்கிறார்? மாநில அரசுக்காகவா? ஒன்றிய அரசுக்காகவா? என்ற சந்தேகம் மக்களுக்கு தொடர்ச்சியாக இருந்துவருகிறது… விஜயின் நீடித்த மவுனம்… தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை சந்திப்பதை புறக்கணிப்பது… ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல்குமாரும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவது எல்லாமே ஏதோவகையில் திட்டமிடலாகவே இருக்கிறது! 4 மாதத்திலேயே யூனிட்டுக்கு ரூ.6 – ரூ.9 ரூபாயாக இருந்த கொள்முதல் விலையை ரூ.35 என உயர்த்தியிருப்பதை என்னவென்பது?? இதுவா மக்களுக்கான ஆட்சி??
ஒன்றிய அரசு கைகாட்டும் தனியாரிடம் மின்சாரத்தை வாங்க வேண்டுமென்பது தான் அவர்களின் விருப்பம்… தற்போது தமிழக அரசை முழுமையாக டெல்லி கைப்பற்றிவிட்டது! அவர்கள் சொல்வதை செய்வதற்காகத்தான் விஜய்… ஆதவ் அர்ஜுனா… நிர்மல்குமார்… அருண்ராஜ் போன்றோர் இருப்பதாகத் தெரிகிறது! அதற்கு தமிழ்நாட்டு மக்களை பலிகடாவாக்குகிறார் விஜய்! மொத்தத்தில், எப்படியிருந்த நாம்… இப்படி ஆகிட்டோம் என்ற நிலை!!


