இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ் தமிழ் 24×7 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள்.
அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள்.
எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்?
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில்.
சரியான ஊடக தலைமையாக இருந்தால் என்ன செய்துயிருக்கவேண்டும்? உடனே நேரலையை நிறுத்தி பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுயிருக்கவேண்டும். அது அரசியல்கட்சிகள் மறைமுகமாக நடத்தும் ஊடகம் என்றால்கூட அதைத்தான் செய்யவேண்டும். அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அவர்களை அழைத்து கழுத்து மேலயே நாலு சாத்து சாத்தி, உனக்கெல்லாம் எவன்டா நெறியாளர் வேலை தந்தது என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும்.
நடுநிலை என்பது மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் வார்த்தை. ஊடகங்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்கவேண்டும். ஒரு பத்திரிக்கையாளனுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும். மக்களுக்கும் அரசுக்கும், அரசுக்கும் சமூகத்துக்கும் இணைப்பு பாலமாக இருப்பதே ஊடகம். அதனால்தான் மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது அரசின் கவனத்துக்கு போக ஊடகத்தின் உதவியை நாடுகிறார்கள். அரசும் தன் கருத்துகளை மக்களிடம் சொல்ல ஊடகத்தை நாடுகிறது.

தற்போது ஊடக அறத்தோடும், சட்டவிதிகளோடும், கண்ணியத்தோடும், சட்டவிதிகளோடு நடக்கவேண்டும் என்பதை ஊடக முதலாளிகள், ஊடகவியலாளர்கள் மறந்துவிட்டார்கள். ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இப்பணிக்கு வருபவர்கள் அதிகம். அதிலும் இந்த சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்கு பின் கையில் சொல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கையாளன் என்கிறார்கள்.
சமூகத்தில் நல்லவன், கெட்டவன், பொறுக்கி, பொறம்போக்கு, ரவுடி, திருடன் என பலவகையான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளாக, அரசு அலுவலர்களாக, மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, சமானிய மனிதராக, தொழில்துறையினராக என அனைத்து துறையிலும் இருக்கிறார்கள். அப்படித்தான் பத்திரிக்கை துறையிலும் புகுந்துள்ளார்கள். இவர்கள் ஊடகத்தில் இணைவது தங்களது பாதுகாப்புக்காகத்தான். அதிகாரத்தில் இருப்பவர்களை மீடியா எனச்சொல்லி சுலபமாக நெருங்கி நட்பு பாராட்டி அதன்மூலமாக தங்களது சட்டவிரோத தொழிலுக்கு பாதுகாப்பு பெறலாம் என்பதற்காக பத்திரிக்கை துறைக்கு வந்தவர்கள் நிறைய உள்ளார்கள். அது ஊடகத்தின் மேல்மட்டம் முதல் தாலுக்கா அளவில் வரை உள்ளார்கள்.
இவர்களை சம்மந்தப்பட்ட ஊடக முதலாளிகள் கூட கேட்கமுடியாது. காரணம் தங்களது கல்வி நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, சீட் கம்பெனிகளை பாதுகாக்க தொலைக்காட்சிகளை தொடங்கி நடத்துகிறார்கள். அதில் பணிக்கு சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துககொள்ளுங்கள். ஊடகத்தில் செய்தி ஆசிரியர்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் தான் இவர்களை வழிநடத்துபவர்கள், அவர்கள் கேட்கமாட்டார்களா?
அரசியலை விட மிகமோசமான உள்குத்துகள் நடக்கும் ஊடக நிறுவனங்களில். அவர்களுக்கு இவர்கள் போன்ற ஜால்ராக்கள், தற்குறிகள் இருந்தால்தான் அது பலவகையிலும் பாதுகாப்பு – பலன் என்பதால் இவர்களை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அந்த ஊக்குவிப்புதான் இந்தளவுக்கு சீரழிவில் வந்து நிற்கிறது.
ஊடகத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆசாபாசம் எல்லாமே இருக்கும். உங்களுக்கு அரசியலில், வாழ்க்கையில் ஒரு சார்பு, கொள்கை இருக்கும். அதன்படி வாழ்வது உங்களது உரிமை. அதில் யாரும் தலையிடமுடியாது. ஆனால் உங்கள் அரசியல் சார்பை, நாயக கொண்டாட்டத்தை உங்கள் ஊடக பணியில் காட்டாதீர்கள். சரியான தலைமை இருந்தால் அல்லது பயிற்சி பெற்றிருந்தால் உங்களுக்கு அதுக்குறித்து பாடம் நடத்தியிருப்பார்கள். அப்படி இல்லாததால் தான் இப்படி டான்ஸ் ஆடவைக்கிறது.
தற்குறி முதல்வர் சைட்சிக் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுவதை ஊடகங்கள் நார்மலைஸ் செய்து முட்டுக்கொடுத்து நாட்டை சீரழிப்பதுப்போல் நெறியாளர்கள் தங்கள் முட்டாள்தனத்தை நேரலையில் வெளிப்படுத்தி ஊடகம் மீது மக்களிடம் கொஞ்சமாகவுள்ள மரியாதையை இன்னும் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்.


