Trending - Viral

கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கும் நீதி கேட்க ஆளில்லையா?

𝟳𝟮 வது தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் தங்கை கார்த்திகா அரை இறுதி போட்டி வரை எடுத்த மொத்த புள்ளிகள் 𝟵𝟰.

இதில் முன் கால் இறுதியில் 𝟮𝟬 புள்ளிகளை எடுத்து ராஜஸ்தான் அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

கால்இறுதியில் 𝟮𝟮 புள்ளிகள் எடுத்து சண்டிகர் அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்து, நம் தமிழ்நாட்டுக்கு வெண்கல பதக்கம்,𝟭𝟵 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடி தந்தார்.

ஆசிய கோப்பை இந்திய அணியிலயோ அல்லது காமன்வெல்த் இந்திய அணியிலயோ இவ்வளவு புள்ளிகளை குவித்த வீரங்கனை இருந்தா சொல்லுங்க.

இந்த தலைசிறந்த வீரங்கனைய தன் சுய விருப்பு, வெறுப்புக்காக வெளியே உட்கார வைத்து பழி தீர்க்கிற அந்த பயிற்சியாளர் செய்யும் தவறு ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

அவர் செய்யும் இந்த தவறான செயலை திருத்தாமல், கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு கபடி அசோசியேசன் மற்றும் 𝗔𝗞𝗙𝗜 நிலைபாடு மேலும் கவலை அளிக்க கூடிய மற்றொன்று.

இது அந்த பயிற்சியாளர் அணி அல்ல இந்திய அணி, அதை அவருக்கு நினைவுபடுத்தி……

இதற்க்கு தேவையான நடவடிக்கையை உடனே எடுங்கள்,இல்லை என்றால் அவரால் வரும் கெட்ட பெயர் அவருக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் சேர்த்து தான்.

#வெட்டுகிளி

#𝗧𝗡𝗞𝗔𝗕𝗔𝗗𝗗𝗜𝗪𝗢𝗥𝗟𝗗

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *