கதை – கவிதை

  • கதை - கவிதை

    இரவெல்லாம்

    5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக…

  • கதை - கவிதை

    முத்தங்கள் ஊறும் கேணி

    இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை  பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே  விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து  தன் கிளைகளில் கனிந்திருக்கும்  பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட  வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…

  • கதை - கவிதை

    எறும்புகளுக்கு உணவில்லாத களஞ்சியம்!

    13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை  கைவிடுங்கள் இப்பழக்கத்தை என  குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை  சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப்  பொந்திடுவதோ…

  • கதை - கவிதை

    துயரத்தின் புதிய ரெசிபி! – K. சுப்பிரமணியன்

    ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறது யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம் மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன் அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும் நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது…

  • கதை - கவிதை

    துயரத்தைச் சந்தித்தல்!

    ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம் தாங்காதென மருத்துவரளித்தபரிந்துரைச் சீட்டை நீட்டலாம்நமது டூப்பை முன்னே அனுப்பிஏமாறுகிறதாவென சோதிக்கலாம் அடையாளம் தெரியாதபடிக்குமரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்னஎனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம் விலாசம் மாறிவந்துவிட்டாயெனபக்கத்துத் தெருவுக்கு…