உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் ஆனியின் முன்கதையும், மேரி ரீடின் முன்கதையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. ஆனியும் ஜேம்ஸும் பஹாமஸ் வந்த அதேசமயத்தில் தான் மேரி ரீடும் அங்கே வந்து சேர்ந்திருந்தாள். ஆனியைப் போலவே மேரியும் சட்டவிரோதமான உறவில் பிறந்தவள்தான். அவளும் இங்கிலாந்தில் ஒரு ஆண் குழந்தையைப் போலவே வளர்க்கப் பட்டிருந்தாள். மேரியின் தந்தை இறந்ததும், அவளுடைய தாய், கப்பலோட்டி ஒருவருடன் வாழத் தொடங்கினாள். அந்த உறவில் பிறந்தவள்தான் மேரி.…


