Description
இந்தியாவில் அரசுத் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார். ஆனால், அது ஒரு அலங்காரப் பதவிதான். உண்மையில் அரசாங்கத்தின் அதிகாரமிக்க பதவி என்பது பிரதமர் பதவிதான். இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும். இந்தத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். அவரைக் குடியரசுத் தலைவர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அவருக்கு மட்டுமின்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் தனது விருப்பப்படி தேர்வு செய்யும் அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்.
இந்தியாவில் இதுவரை அதிக முறையும், அதிக ஆண்டுகளும் பிரதமராக பொறுப்பு வகித்தவர் ஜவஹர்லால் நேரு. இந்திரா காந்திதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இன்றுவரை அந்த பெருமை அவருக்கு மட்டுமே இருக்கிறது. ராஜிவ்காந்தி இந்தியாவின் இளம் பிரதமர். அவர் தனது 40 ஆவது வயதில் பிரதமரானார்.
பதவியில் இருக்கும்போது நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் மரணம் அடைந்தனர். இந்திரா காந்தி பதவியில் இருக்கும்போதே அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜிவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டதால் ஏற்பட்ட அதிருப்தியால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். மன்மோகன் சிங் முதல் சீக்கியப் பிரதமர்.
பாஜக சார்பில் முதல் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் சார்பில் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவை நம்பி அவர் பிரதமராக நீடிக்கிறார்.
இதுவரை இந்தியாவில் பிரதமராக பொறுப்பு வகித்த அனைவரைப் பற்றியும் இந்த நூலில் முழுவிவரம் கொடுத்திருக்கிறோம். அனைவருக்கும் உபயோகமான புத்தகம் இது.
நன்றி
அ.சோழராஜன்





Reviews
There are no reviews yet.