Sale!

OLYMPIC HISTORY AND GAMES – ஒலிம்பிக் வரலாறும் விளையாட்டுகளும்

Author: A.Chozharajan

ISBN: 978-93-94965-02-7

Original price was: ₹350.00.Current price is: ₹300.00.

புராதன ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
கிறிஸ்துவ மதம் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தப் போட்டிகளை இனி நடத்தக் கூடாது என்று தடைவிதித்துள்ளனர்.
கிரேக்க கடவுளர்களுக்கு நடத்தப்படுகிற திருவிழா இது என்று கருதப்பட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
அப்போதே விளையாட்டில் மதவெறி புகுந்துள்ளது.
1890களில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கவ்பெர்ட்டின் என்பவர் விதைத்தபோது அதற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
இருந்தாலும் அவருடைய தொடர் முயற்சி காரணமாக இன்றுவரை நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகளிடையே சமாதானமும் நட்புறவும் வலுப்பெற இந்த போட்டிகள் உதவியாக இருக்கின்றன.
இத்தகைய உயரிய லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன்.
ஒலிம்பிக் வரலாறு மட்டுமின்றி அந்த போட்டிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சேர்க்கப்பட்ட புதிய விளையாட்டுகள் மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கியமான விளையாட்டுகள் குறித்த விவரங்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Description

ஒரு விளையாட்டு வீரருக்கு தன் வாழ்நாள் லட்சியமாக இருப்பது எது?
நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாகத்தான் இருக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
இதற்கான தயாரிப்பு பணிகள் வியக்க வைப்பவை.
ஆம். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அனுமதி பெற வேண்டும்.
போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்ட நாடு எட்டு ஆண்டுகள் அதற்கான வேலைகளில் ஈடுபடும்.
அந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டிய உயரிய போட்டிகள் தொடங்கப்பட்ட வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கி.மு. 700களில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளின் நோக்கம் உன்னதமானது.
ஆம். போருக்கு எதிராக தொடங்கப்பட்டதுதான் இந்த ஒலிம்பிக் திருவிழா என்று அறியும்போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
யுத்த எதிர்ப்பு என்பது எப்போதுமே மனிதர்களின் ஆன்மாவோடு கலந்த விஷயமாக இருந்திருக்கிறது.
அந்த வகையில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மூன்று முறை யுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
புராதன ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
கிறிஸ்துவ மதம் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தப் போட்டிகளை இனி நடத்தக் கூடாது என்று தடைவிதித்துள்ளனர்.
கிரேக்க கடவுளர்களுக்கு நடத்தப்படுகிற திருவிழா இது என்று கருதப்பட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
அப்போதே விளையாட்டில் மதவெறி புகுந்துள்ளது.
1890களில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கவ்பெர்ட்டின் என்பவர் விதைத்தபோது அதற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
இருந்தாலும் அவருடைய தொடர் முயற்சி காரணமாக இன்றுவரை நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகளிடையே சமாதானமும் நட்புறவும் வலுப்பெற இந்த போட்டிகள் உதவியாக இருக்கின்றன.
இத்தகைய உயரிய லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன்.
ஒலிம்பிக் வரலாறு மட்டுமின்றி அந்த போட்டிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சேர்க்கப்பட்ட புதிய விளையாட்டுகள் மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கியமான விளையாட்டுகள் குறித்த விவரங்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அன்புடன்
அ.சோழராஜன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “OLYMPIC HISTORY AND GAMES – ஒலிம்பிக் வரலாறும் விளையாட்டுகளும்”

Your email address will not be published. Required fields are marked *