ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்ட கல்வி உதவித் தொகையை தவெக அரசின் சமூகநீதித்துறை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் அந்த மாணவர் அமைச்சர் சார்ந்த சாதியைக் காட்டிலும் கீழ் உள்ள சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
அந்த மாணவருக்கு சேரவேண்டியது அவருக்கு உரிய உரிமைத் தொகை என்றும், அரசு அவருக்கு வழங்க மறுத்தால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவும் தமிழ்நாடு மக்களும் அவருடைய கல்விக்கு உதவுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து இரண்டு நாளில் மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சமூகரீதியாகவே நிறைய குளறுபடி இருக்கிறது.
பட்டியல் வகுப்பினரில் இடம்பெற்றுள்ள சாதிகளிலேயே ஒரு சாதிக்கு மற்ற சாதி கீழே என்ற உணர்வு மேலோங்கி இருப்பதை பார்க்க முடியும்…
எங்களைப் பட்டியலில் இருந்து நீக்குங்கள் என்று கிருஷ்ணசாமி கூறுவது இந்த மேட்டிமைத் தனத்தால்தான்…
பள்ளர் பறையர் வீட்டில் சம்பந்தம் வைக்க மாட்டார்கள்…
பறையர் அருந்ததியர் வீட்டில் சம்பந்தம் வைக்க மாட்டார்கள்…
ஆனால், இவர்கள் அனைவருமே தங்களைக்காட்டிலும் மேல் அடுக்கில் உள்ள சாதிகளில் திருமணம் செய்வதை மட்டும் விரும்புவார்கள்…
இப்படித்தான்… தங்களைவீட கீழே உள்ள சாதியினர் கற்று மேலே அதிகாரத்திற்கு வருவதை ஒவ்வொரு சாதியும் வன்மமாக பார்க்கிறது…
மாணவர் பாரதிதாசன் தங்கள் சாதி இல்லை என்ற காரணத்தால்தான் அவருக்கு கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவதாக கூறப்படுவதை இதுவரை சம்பந்தப்பட்ட அமைச்சரோ, விசிக தலைவர் குருமாவோ மறுக்கவே இல்லை…
இவர்கள் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததையே எதிர்த்தவர்கள் தானே…
எப்படியோ, மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்க அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.


