உதயநிதியைப் பற்றி நூல் எழுதிய நான்…
திருமாவைப் பற்றியும் எழுதலாமா என்று நினைத்தேன்…
அந்த அளவுக்கு அவர் தனது தொடக்ககால அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தார்…
அல்லது பெற்றிருப்பதாக நான் நம்பினேன்…
நல்லவேளை 2026 தேர்தல் முடிவுகள் எனது முடிவையே மாற்றிவிட்டது…
ஆம் திருமா குருமா ஆகிவிட்டார்…
எழுச்சி வீழ்ச்சியாகிவிட்டது…
என்ன செய்வது பன்றியோடு சேர்ந்தால் அதற்கேற்றபடிதானே மாற வேண்டும்…
ஆக, திராவிட சித்தாந்தத்தை ஏற்றிப் போற்றி பேசியதெல்லாம் இடத்துக்கு தக்க பேசியவை என்பது புரிகிறது…
திருமாவைப் போல திமுக தலைவர்கள் தடாலென்று நிலை மாற முடியாது…
ஆம்… உதயநிதியைப் பற்றி நான் புத்தகம் எழுதும்போது சட்டமன்ற உறுப்பினராகத்தான் ஆகியிருந்தார்…
அவரை திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பி எழுதினேன்… இன்றுவரை திமுகவின் நம்பிக்கை நாயகராகவே ஜொலிக்கிறார்…
அறிவுச்சுடராக நான் கருதிய திருமாவோ மத்தாப்பூக்களாக சிதறிக் கொண்டிருக்கிறார்…
வெட்கப்படுகிறேன் திருமா… இனி எப்போதும் நீங்கள் எனக்குள் இடம்பிடிக்க முடியாது…
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும்போது மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று சொன்னீர்கள்… பின்னர் அதை மறுத்தீர்கள்…
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவை ஆதரித்தீர்கள்… நானும் நல்ல முடிவென்று கருதினேன்… உங்கள் அறிவார்ந்த சொற்பொழிவுகளை கேட்டு உச்சியில் தூக்கி வைத்தேன்…
நல்ல வேளை தவெக என்ற 35 சதவீதக் கட்சி உங்களை அடையாளப் படுத்திவிட்டது…
இனி 2016ல் பார்த்த திருமாவாக மாறுவீர்கள்… மாறினால்தான் சோறு என்று விஜய் சொன்னால் நிச்சயம் அதைச் செய்வீர்கள் என்பது உறுதியாகிவிட்டது…



