அரசியல்

ஈழ தமிழர் என்று சொல்லி வைகோ தங்க வைத்த பெண்மணி யார்? – வல்லம் பசீர்

யார் துரோகி ?

என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா?

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், என் மீது தவறான தகவல்களைச் சொல்லி எனது அரசியல் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வைகோ மகன் முயற்சி செய்கிறார் என்றும் உங்களிடம் பலமுறை தெரிவித்தேன். ஆனால், எனக்கு ஆதரவாக நிற்பது போல என்னிடம் பேசிய நீங்கள், மறுபுறம் வேறு விதமாக செயல்பட்டது எனக்கு தெரியாதா ? சரி அது இப்போது பேசவேண்டிய செய்தியல்ல .

நான் எதோ பெண்கள் குறித்து தவறாக எழுதினேன் என ஒரு அபாண்ட குற்றசாட்டை வைக்கிறீர்கள் , நான் பெண்கள் குறித்து தவறாக பேசியதாக

ஒரே ஒரு பதிவை காட்டமுடியுமா ? மாறாக இரண்டு நாட்களாக என் வீட்டு பெண்களை கொச்சைப்படுத்தி உங்களது அரவணைப்பில் பணியாற்றும் பெண் நிர்வாகி எழுதிவருகிறாரே அந்த பதிவை உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டுங்கள் உச்சி முகர்ந்து உங்களை பாராட்டுவார்கள் .

என் பதிவுகளை நிறுத்தி கொள்வது தான் எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லது என்கிற உங்களது மிரட்டலிலேயே வெளிப்பட்டுவிட்டது என் வீட்டு தகவல்களை கொஞ்சமாக அறிந்து கொண்டு அதற்கு உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு வண்ணம் பூசி எங்கள் வீட்டு பெண்களை இழிவாக பேசவைப்பது யார் என்ற கேள்விக்கான விடை .

இவையெல்லாம் இருக்கட்டும் நான் வைகோ குறித்து பேசியது அவதூறா ? சரி சில உண்மைகளை சொல்கிறேன் கேளுங்கள் இவையெல்லாம் உங்கள் தந்தையார் தமாக சென்ற போது எங்களை போன்றவர்களுக்கு சொன்ன செய்திகள் தான் . வைகோ , அண்ணன் பெல் ராஜன் வீட்டில் ஈழ தமிழர் என்று சொல்லி தங்க வைத்த பெண்மணி யார் ? அவருக்கு பிறந்த மகளுக்கு மணிமேகலை என பெயர் சூட்டிய பின்னணி என்ன ? வைகோ இல்லத்தில் இருந்த வரதராஜன் அவ்வப்போது செலவுக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு வைகோ சொல்லி பணம் கொடுத்து வந்தது ஏன் ? என வைகோவிடமோ அவரது மகனிடமோ கேளுங்கள் .

இதையெல்லாம் கேட்க முடியாவிட்டாலும் “ஹெப்சிக்கா” என்ற கிருத்தவ பெண்ணை நினைவிருக்கிறதா என உங்கள் MP அண்ணனை கேளுங்கள் Description: 😉

மிசா சட்டத்தின் கீழ் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் மறுக்க முடியாத ஒன்று. அந்தத் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் யாராவது பேசினால், அதற்கு பதிலளிப்பது இயல்பான அரசியல் எதிர்வினை. அந்தச் சூழ்நிலையில்தான் நான் பதிலளித்தேன் வைகோ அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதோ, தனிப்பட்ட விவரங்களைப் பேச வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல நான் அவதூறு பரப்பவுமில்லை, தேவைப்பட்டால் நான் பேசிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரத்துடன் பதிலளிப்பேன்.

உங்களுக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ் Description: 🙂என்னதான் பக்கம்பக்கமாக எழுதி தள்ளினாலும் , மூச்சுக்கு முந்நூறு அண்ணன் சொல்லி உங்கள் எம்பியை அழைத்தாலும் உங்களுக்கு கவுன்சிலர் சீட்டுக்கூட கிடைக்காது , கிடைக்க விடமாட்டார் உங்கள் அண்ணன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *