உண்மையிலேயே இந்தப் பெயர் யாருக்குப் பொருத்தும்னா நம்ம முதலமைச்சர் விஜய்க்குதான் பொருந்தும்.
அப்பா அம்மா பொண்டாட்டி புள்ளைங்க விஷயத்தை எல்லாம் விட்டுருங்க. அதெல்லாம் பழைய கதை. திமுகவின் நாகரிக பாஷையில் சொன்னா அது அவங்க பர்சனல் மேட்டர்.
அவர பாக்க ஆசைப்பட்டும் அவர் பேசறத கேக்குறதுக்கு ஆசைப்பட்டும் கரூர் வந்து 41 பேர் செத்தாங்க. அத தாண்டி சில இடங்களில் சிலர் பலியானதெல்லாம் ‘’உள்ளூர் வரிகள் தனி’’ மாதிரி!
ஆட்சி அமைக்கிறதுக்கு வெளியிலிருந்து கை கொடுத்து உதவுன கம்யூனிஸ்ட்டுங்க நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருங்களேன். வழக்கம்போல கொஞ்சம் விமர்சிச்சாங்கன்னு அவங்கள குப்புற தள்ளி கழுவி கழுவி ஊத்துறாங்க.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்ல தனியா நின்னு கம்யூனிஸ்ட் சிலநூறு ஓட்டுகள் தான் வாங்கினாங்க. அதையே சொல்லிச் சொல்லியே தோழர்கள ஆதவ் அர்ஜுனா கோஷ்டி புரட்டி புரட்டி அடிக்கிது. அவங்க பன்ற நக்கல்ல தோழர்கள் எல்லாரும் நாண்டுகிட்டு சாவாதது தான் பாக்கி.
அடுத்து அமைச்சரவைல சேர்ந்த விடுதலை சிறுத்தைகள்…
வன்னியரசுக்கு பதவி வெறியை ஏத்தி விட்டுட்டு திருமாவுக்கு செக்கு வெச்சுட்டாங்க. விஜய் பண்ற அக்கப்போருக்கெல்லாம் இவர் முட்டுக்குடுத்து முட்டுகுடுத்து ஒருநாள் பேசுனத மறுநாள் மாத்தி பேச வேண்டிய நிலைமை. திருமாவளவன் பேசுனாலே எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு அவர மூத்திர சந்துல கொண்டு போய் நிறுத்திட்டானுங்க.
அப்புறம் அஜித் கதை 30வருஷமா லட்சக்கணக்கான ரசிகர்களை தனித்தன்மையோட வச்சிருந்தாரு.

அஜித்தையும் அவர் படங்களையும் அணில் கோஷ்டி படு கேவலமா பேசனப்போலாம் கொலை வெறியோடு எதிர்தாக்குதல் நடத்துனாங்க அஜித் ரசிகர்கள்.
கடந்த 25 வருஷத்துல இதுக்காக அஜித் ரசிகர்கள் பாட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. புது படம் வந்தா ஏகப்பட்ட செலவு செஞ்சு பிரம்மாண்ட ரிசப்ஷன் கொடுப்பாங்க. முதல் நாள் முதல் காட்சிக்கு விஜய் குரூப்பை வெக்கப்பட வெக்கிறத்துக்காகவே பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவாங்க, தல தலன்னு உயிரையே விடுவாங்க.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை விட இந்த தல & தளபதி ரசிகர்கள் சண்ட அவ்வளவு மூர்க்கமா இருந்துச்சு
சினிமாவுல போட்டியாளரா அஜித்திடம் பல தடவை விஜய் பல்பு வாங்கி இருக்காரு. அந்தக் கணக்கை எல்லாம் தீர்க்கத்தான் முதலமைச்சரான பிறகு விஜய் லண்டன் ட்ரிப்பை அருமையா பயன்படுத்தினாரு.
லண்டன் போய் கார் ரேஸ் மைதானத்தில் அஜித்தை விஜய் கட்டி புடிச்சப்போ எல்லாருடைய நெகட்டிவ் போக்கஸும் திரிஷா மேல தான் இருந்துச்சு.
ஆனா காலங்காலமா எதிரியா பாவிச்சி வந்த விஜய், தங்கள் தல அஜித்தை கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதைவிட, அதற்கு வெட்கமே இல்லாமல் தல மண்டைய ஆட்டியதாகவே பொங்கினார்கள். அப்போதே, உயிருக்கு உயிராய் நேசித்த அஜித்தை அவரின் ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் அடித்து நொறுக்கினார்கள்.
லேட்டஸ்ட்டா போர்ச்சுகலில் நடந்த தனது கார் ரேஸுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று அஜித் ஒரு வீடியோ போட்டார். அஜித்தே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படி ஒரு கடும் எதிர்ப்பு தன்னுடைய ரசிகர்களிடமிருந்தே தனக்கு வந்து தொலையும் என்று.
“தலைவா எங்களுக்கு வேலை இருக்கிறது. நீங்க சொன்ன மாதிரி குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்று அஜித் முகத்தில் வீடியோக்களால் திருப்பி அடித்த ரசிகர்கள் ஏராளம்.
அஜித்தை அவமானப்படுத்தும் அந்த வீடியோக்களை முன்னணி சேனல்கள் கூட வைரலாக்கின.
யோசித்துப் பாருங்கள்- விஜய் ஒரே ஒரு முறை தான் அஜித்தை கட்டிப்பிடித்தார். ஸ்டார் அந்தஸ்தில் இருந்த அவர் கதை க்ளோஸ். ரசிகர்கள் ஆதரவின்றி அனாதையாக இன்று அஜித்.
விஜய்யின் கொடூரமான புத்தியை இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை நினைத்துப் பாருங்களேன்…
இன்னும் நிறைய சொல்லலாம். கிளைமாக்ஸாய் லேட்டஸ்ட் விஷயம்.

நிஜ லெக் தாதா
இன்று அக்டோபர் 10ஆம் தேதி. தலைமை தேர்தலான ஞானேஷ்குமார் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்தால் நாடே பற்றி எரிகிறது.
தலைநகர் டெல்லியில் பஸ் ரயில் மெட்ரோ கடைகள் ஹோட்டல்கள் லாட்ஜுகள் என அத்தனையும் முடக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. டெல்லியை நோக்கி வரும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து. கண்ணில் தென்படும் போராட்டக்காரர்களை அடித்து உதைத்து கைது செய்கின்றனர் அமித்ஷாவின் அடிமையாக செயல்படும் டெல்லி போலீசார். முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல பெருந்தலைகள் டெல்லியில் கைது.
இந்தச் சூழ்நிலையில் டெல்லியில் இருக்க வேண்டிய முக்கியமான ஆள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆனால் அவரை இதே நாளில் சென்னைக்கு வரவழைத்து காபி ஷாப்பில் ஜாலியாக காபி குடிக்க செய்து உறவாடிக் கெடுக்கிறார் முதலமைச்சர் விஜய். இது புரியாத ராகுல் உண்மையிலேயே பப்புதான் போல!
‘’இங்கே டெல்லி பற்றி எரியும் நேரத்தில் சென்னையில் காபி ஷாப்பில் ராகுல் காந்தி எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக காபி குடித்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்’’ என்று இந்திய நாடே காரித் துப்புகிறது. உபயம் சாட்சாத் நம்ம முதலமைச்சர் விஜய்தான்.
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து இவ்வளவு நாள் போராடி வந்த ராகுல் காந்தி முக்கியமான இந்நாளில் தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி எதிர்பார்த்தது இதைத்தானே!
நாளை சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு வரும் மோடிக்கு அவரின் அடிமையான விஜய் அளித்திருக்கும் அற்புதமான பரிசுதான் ராகுல் பட்டிருக்கும் இந்த அவமானம்.
இப்படி நம்பியவர்களை எல்லாம் கழுத்தறுக்கும் நம்ம லெக் தாதா விஜய்யிடம்தான் இந்த மாநிலத்தை ஒப்படைத்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டுத் தற்குறிகள்.
வெலங்கீரும்
Arul Raj



