இன்னிக்கு காலைல பெசண்ட் நகர்ல கரப்பான்பூச்சி கட்சியோட மாணவர்கள் போராட்டம் நடந்துச்சு. மாணவர்கள வலுக்கட்டாயாம கைது செஞ்சு காவல்துறை கல்யாண மண்டபத்துல அடைச்சு வச்சாங்க.
திமுக எம்.பி. ஆ. ராசா, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மா. சுப்ரமணியன் உடனடியா அந்த கல்யாண மண்டபத்துக்கு போய் மாணவர்கள விடுதலை செய்யச் சொல்லி கேட்டாங்க.
வாக்குவாதம் ஆனாலும் காவல்துறை அவங்கள விடுதலை செய்யல.
அவங்கள விடுதலை செஞ்சாதான் போவோம்னு அந்த மண்டபத்துக்கு எதிர்லயே சாலைல உக்காந்துட்டாங்க. அக்கம்பக்கம் இருக்க மக்கள் சேர், தரைல விரிக்க விரிப்புன்னு குடுத்து சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சதும் அங்க கூட்டம் கூடிருச்சு.
இன்னும் சில பேர் எம்.பிக்களோட உக்கார ஆரம்பிச்சதும் உடனடியா போலீஸ் மாணவர்கள விடுதலை செஞ்சிருச்சு.
மாணவர்கள் போராட்டதுல புகுந்து போராட்டத்த ஹைஜேக் செஞ்சு, அதுல தங்களோட கட்சி ஸ்டிக்கர ஒட்டிக்கிற ராகுல் காந்தி விஜய் சந்திக்கிறாரு. ஆனா விஜயோட காவல்துறை பாஜகவுக்கு எதிரா போராடுன மாணவர்கள கைது பண்ணுது.
சென்னைல அதே போராட்டத முன்னெடுத்த மாணவர்கள் கைது செஞ்சத பத்தி காங்கிரஸ் வாய் திறக்கல.
ஆட்சில இருந்தாலும் இல்லாட்டாலும் மக்களோட பிரச்னைகளுக்கு திமுக நிக்கும்ன்னு சொல்றது வெத்து பெருமை இல்ல. அதுதான் திமுகவோட இயல்பும் கடமையும்.
வித்யா எம்
சனிக்கிழமை, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வருக்கு எதிரான போராட்டத்தில் நேஹா போராவை போலீஸ் கைது செய்தது. கைது செய்து அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தை துணிவோடு தடுத்து நிறுத்தும் பெண்களுக்கு 18 – 20 வயதுதான் இருக்கும்! 40,000 போலீசாரை குவித்து ஒடுக்க நினைத்தும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து போராடும் இளைஞர் பட்டாளத்தின் முன், மத்திய அரசின் ஒற்றை எடுபிடி ஆளை காப்பாற்றப் போராடும் அதிகாரவர்க்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!!
“நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம்… ஆனால் அது ஒரு பொருட்டல்ல. எனது Gen Z தலைமுறை நண்பர்களே…இது நமக்கான 1942-ஆம் ஆண்டு போன்றது. அவர்களது சிறைகளால் நம்மில் சிலரைத்தான் அடைத்து வைக்க முடியுமே தவிர, நம் அனைவரையும் அல்ல! இன்று நாம் எங்கு தடுத்து நிறுத்தப்பட்டாலும், அங்கேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு இடமும் ‘ஜந்தர் மந்தர்’ ஆக மாறட்டும்!!”
– நேஹா போரா, AISA



