இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன்…


