வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.


