வெண்படைக்கு சோற்றுக்கற்றாழை! இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப் படுத்தப்படுகின்றது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து தொங்கவிட…


