இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன மீண்டும் நான் திருப்புட்குழி பள்ளிக்கு வந்து. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று வீட்டிலும், பள்ளியிலும் அவ்வப்போது பயமுறுத்தப்படுவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர். எட்டாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் எனக்கு பயங்கர சேலன்ஜ் தருகின்றனர். ஒவ்வொரு நாளும் புதுமை என்பது என் வகுப்பறைச் செயல்பாட்டு திட்டம். ஒவ்வொரு நாளும் ஆசிரியர் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியேறும் வரை என்ன மாதிரியான செயல்களைச் செய்வார்கள் என்று மாணவன் கணித்து…