கோபாலய்யங்காரின் மனைவி 1 (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம்,…
கதை
-
-
எதையோ பேசினார் வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். ‘இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்‘ என்ற நம்பிக்கையோடு தெருவில் நடந்தேன். என் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கும் என்றும் தற்பெருமையாக எண்ணிக் கொண்டே பஸ் நிலையத்தை அடைந்தேன். “உனக்கு வாழ்க்கைப்பட்டு” என்று தொடங்கி விம்மிய குரலைக் கேட்டுத் திரும்பினேன். குழிந்த கன்னங்களையும் அழுக்கேறிய ஆடையையும்…
-
கோபாலபுரம் கோபாலபுரம் ஒரு சிற்றூர். சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், நான் ஏன் சைத்திரிகனாகப் பிறந்திருக்கக்கூடாது என்று படும். ஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின்…
-
ஹைபவர் கமிட்டி ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்“ – என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளி வந்திருந்தன. சமூக சீர்த்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜீக்காரர்களும், ஸோஷியாலஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு…
-
தேங்காய்த் துண்டுகள் “மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர்…
-
ஆற்றங்கரைப் பிள்ளையார் ஊழி காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம். அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது. கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.****ஒரு கிழவர் வந்தார். பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று. ‘சமூகம்‘ என்ற ஒரு மேடையைக்…
-
கொத்தடிமைகள் அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத – மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது நாளும் கல்லுடைப்பது என்பது அநியாயம்தான். எந்தச் சலுகையும், எந்த வசதியும், தொழிலாலர் நலச் சட்டங்களின் எந்தப் பிரிவும் அணுக முடியாத காட்டுப் பிரதேசம் அது. விடிந்ததிலிருந்து…
-
வாய்த் திறக்க மாட்டேன் “நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம்…
-
ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம் தாங்காதென மருத்துவரளித்தபரிந்துரைச் சீட்டை நீட்டலாம்நமது டூப்பை முன்னே அனுப்பிஏமாறுகிறதாவென சோதிக்கலாம் அடையாளம் தெரியாதபடிக்குமரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்னஎனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம் விலாசம் மாறிவந்துவிட்டாயெனபக்கத்துத் தெருவுக்கு…





