சேஜோங் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு பாராட்டு சியோல், தென்கொரியா: தென்கொரியாவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேஜோங் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு, அவரது சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணியைப் பாராட்டி பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது. தென்கொரியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆட்டோமொபைல் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு…
Uncategorized
-
-
உடன்கட்டை ஏற்றுதலை நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர்..! இது 1798ல் எழுதப்பட்டது … பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் .. இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை .. அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் .. வெள்ளை…
-
காதலுடன் காதலை அணைத்து காதலால் காதலை கொண்டாடும் நந்நாள் காதலர்நாள்… இந்நாளில் என் காதலுக்கு ஓர் மடல்… ஓர் அழகான மாலை இதமான காற்று முதன் முதலாய் உன்னைப் பார்த்தேன்! முதற்பார்வையிலே காதல் பிறப்பதுண்டு கவிதைகளில் படித்திருந்தேன்… முதன் முதலாய் உன் கண்கள் என் கண்களை உண்டபோது காதலின் பிறப்பை முழுதாய் அனுபவித்தேன்… அன்றிலிருந்து தொடங்கியது உனக்கான என் காதல் பயணம்! உன்னைக் கண்ட நாள் முதல் என் உலகம்…
-
அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி. இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த…
-
https://amzn.to/43T3AjD
-
தூய்மையான வாழ்க்கை. களங்கமற்ற சிந்தனை. உறுதியான நடவடிக்கைகள். இதுதான் ஜோதிபாசு. சுயநலம் சிறிதும் இல்லாமல், ஒடுக்கப்படும் மக்களுக்கு அருகிலேயே கடைசிவரை நிற்பவர்கள்தான் மக்கள் தலைவராக மதிக்கப்படுகிறார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருகில், எத்தனை துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு நின்றார் ஜோதிபாசு. https://amzn.to/3NYpagn மக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டால் போதாது. இவர்கள் நமக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
-
ஓர் இனத்தை, மொழியை அவ்வினத்தின் கலையை அரசியலை இன்னும் பற்பல விழுமியங்களை தலை நிமிர்த்திட காலம் அவ்வப்போது ஒரு தலைவனை தேர்வு செய்யும்… மாணவப் பருவத்திலேயே ஈரோட்டுக் கண்ணாடி அணிந்துகொண்டு காஞ்சித்தலைவன் கை பிடித்து வளர்ந்த கலைஞரையும் தமிழ் மண் அப்படித்தான் தேர்வு செய்தது… இளம் மாணவப் பருவத்திலேயே தான் பிரசவித்த மாணவ நேசன் இதழுக்காய் திறந்த அவரின் பேனா மூடி முரசொலியின் பல்லாயிரம் உடன்பிறப்பிற்கான கடிதங்களை தடம் பதித்து…
-
சாதிப் பின்புலம் இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. தனது சொத்தாக அவர் கொண்டிருந்தது தமிழ்தான். தமிழால் தமிழர்களின் இதயங்களை வென்றவர் கலைஞர். 12 வயதில் தொடங்கிய அவருடைய தமிழ்பற்று, அவருடைய தமிழறிவை வளர்த்தது மட்டுமின்றி, தமிழர்களுக்கும் எளிய தமிழை அறிமுகப்படுத்தியது. “கோட்டான் குயிலுக்கு குரல் கற்றுக் கொடுத்ததாம்…!” “சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல, எண்ணிக்கையிலே குறைந்த அந்தக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது… நிராயுதபாணிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின்…
-
மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையா கருதினார். அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் மாணவநேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தப் பத்திரிகை வழியாக மாணவர் இயக்கத்தை தொடங்கியவர். பின்னர், கலைஞர் தனது 18 ஆவது வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் 1942 ஆம்…
-
கலைஞர் திருவாரூர் பள்ளியில் படிக்கும்போது 1937 ஆம் ஆண்டு முதல்வரான ராஜாஜி கட்டாய இந்திக் கல்விக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். இதுதான் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலேயே பள்ளி மாணவராக கலந்து கலந்துகொண்டார் கலைஞர். ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று வீதிகளில் கொடிபிடித்து முழக்கமிட்டவர். தனது இந்தி ஆசிரியரிடமே இந்தியை எதிர்த்து எழுதப்பட்ட துண்டு நோட்டிஸை கொடுத்தவர். சுமார்…



