வாய்த் திறக்க மாட்டேன் “நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம்…


