நாம் ஒன்றுமே இல்லையென்று நினைக்கிற சின்ன விஷயம் சிலருக்கு முக்கியத்துவமானதாக இருக்கும். சிலர் நிதானமாக நின்று இரசிக்கிற விஷயங்கள் நமக்கு சில்லறைத்தனமாகத் தோன்றும். காரணம், எல்லாவற்றிலும் நமக்கு ஏதோ ஒரு அவசரம். ஈடுபாடின்மை. அப்படி அவசரப்படாதீர்கள் என்று உட்கார வைக்கிற படம் இந்த மெய்யழகன். அருள்மொழியுடைய(அரவிந்த்சாமி) ஜீவன், அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரிலும் அந்த வீட்டிலும் இருக்கிறது. அதை அவனிடமிருந்து இளவயதிலேயே பிரித்துவிட்டார்கள். ஒருகாலத்தில் எல்லோரிடமும் அன்பாக…