1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…


